Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தேனியில் பறிமுதல்

Print PDF

தினமலர் 27.03.2010

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தேனியில் பறிமுதல்

தேனி : தேனி பகுதியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு முறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டீ கப்புகளை நகராட்சி பகுதிகளில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மட்காத குப்பைகளான இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் புதைவதால் நிலத்தடி நீர் வளம் பாதிக்கிறது. கழிவு நீர் கால்வாய்களில் தேங்கி அடைப்பை ஏற்படுத்துகின்றன. இவைகளை கடைகளில் பயன்படுத்தவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் கமிஷனர் மோனி உத்தரவின் பேரில், நேற்று நகராட்சி சுகாதார அலுவலர் தயாளன் தலைமையில், உணவு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். பெரியகுளம் ரோடு, காளியம்மன் கோயில் தெரு, பகவதியம்மன் கோயில் தெரு, கடற்கரை நாடார் சந்து உட்பட பல பகுதிகளில் நடந்த சோதனையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை தொடர்ந்து நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

Last Updated on Saturday, 27 March 2010 06:10
 

நீர் நிலையை கலங்கடிக்கும் நேரடி கழிவு அதிர்ச்சி தரும் புள்ளி விபர அறிக்கை

Print PDF

தினமலர் 24.03.2010

நீர் நிலையை கலங்கடிக்கும் நேரடி கழிவு அதிர்ச்சி தரும் புள்ளி விபர அறிக்கை

திருப்பூர்: 'நீர் நிலைகளில் சுமார் 90 சதவீதம் கழிவு நீரும், 70 சதவீதம் தொழிற்சாலை கழிவுகளும் எவ்வித சுத்திகரிப்பும் செய்யப்படாமல் நேரடியாக கொட்டப்படுகிறது' என, குடிநீர் வடிகால் வாரியத்தின் புள்ளி விபர அறிக்கை தெரிவிக்கிறது. உலக தண்ணீர் தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. திருப்பூரில் நடந்த விழிப்புணர்வு பேரணியின் போது, சுற்றுப்புறச் சூழல் குழுமக்கோட்டம், நீர்வள ஆதாரத்துறை, பொதுப்பணித்துறை, 'யுனிசெப்' மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், அறிக்கையும், துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன. அதில், தண்ணீர் மாசுபடுவதற்கான காரணங்களும், மாசுபாட்டின் வகைகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நதிக்கரை ஓரங்களில் மனித நாகரிகம் வளர்ந்துள்ளது; நாகரிக வளர்ச்சிக்கு காரணமாக இருந்த நதிகள், நகரங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நவீன விவசாயங்கள் மூலம் மாசுபட்டு கிடக்கின்றன. பாலாறு, பவானி, நொய்யல், வைகை போன்ற நதிகளை அந்த பட்டியலில் சேர்க்கலாம். உள்ளாட்சி நிர்வாகங்களின் குப்பை, சாக்கடை கழிவு மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் நீர்நிலைகள் இயற்கை தன்மை இழந்து, சீரழிந்து விட்டன. கடந்த 50 ஆண்டுகளாகவே, நீர்நிலைகள் மாசுபடுத்தப்பட்டு வருவதால், நீரின் தரம் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நீரினால் ஏற்படும் நோய்களால் 15 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர். உலக அளவில் தினமும் 20 லட்சம் டன் கழிவு நீர், நல்ல தண்ணீரில் கலந்து வருகிறது. நீர் நிலைகளில் 90 சதவீதம் கழிவு நீரும், 70 சதவீதம் தொழிற்சாலை கழிவு களும் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி கலக்கிறது. இவற்றில் சில கழிவு பொருட்கள் நீண்ட காலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியவை. மக்கள் தொகை அதிகரிப்பாலும், பயன்பாட்டு பொருட்களின் தயாரிப்பு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத் தாலும், சுரங்கத்தொழில் மற்றும் நகரமயமாக்கல் போன்ற செயல்பாடுகளாலும் நீரின் தன்மை பாழடிக்கப் பட்டுள்ளது. கிராம குடிநீர் திட்டத்தில், குடிநீரின் தரத்தை அனைவரும் பரிசோதனை செய்து அறிந்து கொள்ளும் வகையில், களநீர் பரிசோதனை பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த களநீர் பெட்டியை பயன்படுத்தி நீரின் தரத்தை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நீர்வள ஆதாரங்களை பாதுகாக்க, கால்வாய், குளம், குட்டைகளின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; தொழில்சாலைகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, தொடர்ந்து இயக்க வேண்டும்; உற்பத்தி முறையில் கழிவை குறைக்கும் தொழில்நுட்பத்தை கடைபிடிக்க வேண்டும்; இயற்கை விவசாய முறையை செயல்படுத்த வேண்டும்; காடுகளை அழிப்பதை தவிர்த்து, மரக்கன்றுகள் நடுவதை சமூக விழாவாக கொண்டாட வேண்டும் என்பன போன்ற செயல் திட்டங்களை ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்த வேண்டும், என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 24 March 2010 09:55
 

ஒற்றையால்விளையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி 19.03.2010

ஒற்றையால்விளையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வுப் பேரணி

கன்னியாகுமரி, மார்ச் 18:ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் என். சுடலைமணி தொடக்கிவைத்தார்.

பள்ளித் தலைமை ஆசிரியர் பி. முருகன் தலைமை வகித்தார். பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் என். இந்திரலேகா, பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத் தலைவர் ஹரிஜெயராஜா முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் கே. ராசையா, பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.

பஞ்சலிங்கபுரம் ஊராட்சி அளவிலான சுய உதவிக் குழு கூட்டமைப்பு சார்பில் பிளாஸ்டிக் தவிர்ப்புப் பேரணி நடைபெற்றது.

பேரணியை, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் இரா. சுந்தரராஜு தொடக்கிவைத்தார். ஊராட்சித் தலைவர் ஆ. கண்ணன், துணைத் தலைவர் எஸ். துரைசாமி, சுண்டன்பரப்பு ஊர்த் தலைவர் பி. பெரியசாமி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பி. காமராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்புச் செயலர் எம். சசிகலா வரவேற்றார்.

பேரணியில், மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் ஆன்றனி சிலுவை, வி.எஸ். சுப்பையா, வட்டார வளர்ச்சி துணை அலுவலர் நீலபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மகளிர் கூட்டமைப்புத் தலைவர் எஸ். தங்கம் நன்றி கூறினார். இதையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Last Updated on Friday, 19 March 2010 10:50
 


Page 105 of 135