Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

குப்பை எரிப்பு விவகாரம்: மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜர்

Print PDF

தினமணி 23.02.2010

குப்பை எரிப்பு விவகாரம்: மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை, பிப்.22: சென்னையை அடுத்த கொடுங்கையூரில் குப்பைகளை எரிக்கும் விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜரானார்.

கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் தளத்தில், குப்பைகள் எரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த சென்னை மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது.

கவியரசு கண்ணதாசன் நகர் குடியிருப்போர் நல சங்கம் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் தளத்தில் மேற்கொண்டு குப்பைகள் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு குப்பைகள் எரிக்கப்படுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே, அங்கு குப்பைகள் எரிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், குப்பைகளை எரிப்பதை நிறுத்துமாறு சென்னை மாநகராட்சிக்கு 2007}ம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவுக்குப் பிறகும் குப்பைகள் தொடர்ந்து எரிக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி என்.பால் வசந்தகுமார் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ""

குப்பைக் கொட்டும் தளத்தில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த மாநகராட்சி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. குப்பைப் பொறுக்குவோர் அங்கு நுழையாதவாறு போலீஸôர் ரோந்து செல்லுமாறு உத்தரவிட வேண்டும்'' என்று மாநகராட்சி தரப்பில் கோரப்பட்டது. இதுதொடர்பாக, உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி இதுதொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்தார். இந்த நடவடிக்கைகளை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அவருக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை பிப்ரவரி 24}ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Last Updated on Tuesday, 23 February 2010 10:13
 

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க பிச்சாவரத்தில் கலந்துரையாடல்

Print PDF

தினமலர் 23.02.2010

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க பிச்சாவரத்தில் கலந்துரையாடல்

பரங்கிப்பேட்டை : கிள்ளை பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கிள்ளை பேரூராட்சி மற்றும் கிரீடு நிறுவனம் இணைந்து பிச்சாவரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.பேரூராட்சி சேர்மன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கிரீடு நடனசபாபதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பிச்சாவரத்தில் உள்ள சதுப்பு நிலக்காடுகளை பாதுகாக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என எடுத்து கூறப்பட்டது.கூட்டத்தில் துணை சேர்மன் பரமதயாளன், சுற்றுசூழல் அதிகாரி திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் சங்கர், கலா, கற்பனைச்செல்வம், பாண்டியன், ரவிச்சந்திரன், கிராம நிர்வாகிகள் பாஸ்கர், மலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 23 February 2010 07:14
 

ஏப். 1 முதல் பிளாஸ்டிக் தடை

Print PDF

தினமணி 20.02.2010

ஏப். 1 முதல் பிளாஸ்டிக் தடை

நாகர்கோவில், பிப். 19: கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார்.

நாகர்கோவில் ஆட்சியர்

அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் கோரிக்கை தினக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

விவசாயிகள் தங்களுடைய பம்புசெட் மின்மோட்டார்களைப் பழுது நீக்கம் செய்ய, கோணம் தொழிற்பேட்டையில் உள்ள கன்னியாகுமரி வேளாண்மை பொறியியல் மற்றும் சேவை கூட்டுறவு சங்கத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் விஜயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கியாம் கரம்தாஸ், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சிறில் கிறிஸ்டோபர், கோட்டாட்சியர் நடராஜன், உதவி செயற்பொறியாளர் மலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 20 February 2010 10:47
 


Page 111 of 135