Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

ரப்பர், பிளாஸ்டிக் பொருள்களை எரித்தால் கடும் நடவடிக்கை

Print PDF

தினமணி 13.01.2010

ரப்பர், பிளாஸ்டிக் பொருள்களை எரித்தால் கடும் நடவடிக்கை

பொருள்களை எரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி:

போகிப்பண்டிகையன்று கிராமங்களில் கிழிந்த பாய், துணிகள், விவசாயக் கழிவுகள் போன்ற தேவையற்ற பொருள்கள் எரிக்கப்படும். இது சூழலுக்கு தீமை ஏற்படுத்தாது ஒன்று. தற்போது போகியன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருள்களை எரித்து நச்சுப் புகை ஏற்படுத்தப்படுகிறது. மக்கள் நெருக்கம் அதிகம் உளள நகரப் பகுதிகளில் இதுபோன்ற நச்சுப்புகை சேருவதால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பழைய மரம், வறட்சி தவிர வேறு எதையும் எறிப்பதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை மீறுவோர் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கைஎடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 13 January 2010 09:27
 

பிளாஸ்டிக்&பாலித்தீன் ஒழிப்பு பிரசாரம்

Print PDF

தினகரன் 13.01.2010

பிளாஸ்டிக்&பாலித்தீன் ஒழிப்பு பிரசாரம்

ராமநாதபுரம் : சபரிமலையில் உள்ள வனங்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் மாசுபடுவதுடன் காடுகளில் உள்ள விலங்குகள் பெரிதும் பாதிப்படைகின்றன. இதனால் சபரிமலை வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலித்தீன் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவித்து இருந்தனர்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் அருகேயுள்ள ரெகுநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் உள்ள 500 பக்தர்கள் இந்த வருடம் சபரிமலைக்கு செல்லும்போது எந்தவித பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களை எடுத்து செல்லவில்லை. அத்துடன் கிளீன் சபரிமலை என்ற வாசகம் அடங்கிய பேனர்கள் மற்றும் தங்களது இருமுடி பையில் பிளாஸ்டிக் தவிர்ப்பீர் என்ற வாசகங்களை எழுதியுள்ளனர்.

இதை அறிந்து சபரிமலை திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சபரிமலை வந்த பக்தர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆலய நிர்வாகியும் குருசாமியுமான மோகன்சாமிக்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜெயக்குமார். கேரள சன்னிதானம் காவல்துறை எஸ்பி வேணுகோபால் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்று சன்னிதானத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தமிழகத்திலேயே முதன்முறையாக ஐயப்பக்தர்களுக்கு வரவேற்வு அளித்து அங்குள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சிகளுக்கும் ஐயப்பக்தர்களின் விழிப்புணர்வு பிரசாரம் குறிதது தேவஸ்தான அதிகாரிகள் பேட்டி அளித்தனர்.

Last Updated on Wednesday, 13 January 2010 06:56
 

தடை செய்யப்பட்ட 'கேரிபேக்' திடீர் ஆய்வு நடத்த ஆலோசனை

Print PDF

தினமலர் 13.01.2010

தடை செய்யப்பட்ட 'கேரிபேக்' திடீர் ஆய்வு நடத்த ஆலோசனை

ஊட்டி : "தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் அதிகரிக்கப்பட்டுள்ள உபயோகிப்பதை தடுக்க, முன்னறிவிப்பின்றி அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலர் ஜனார்தனன் மாவட்ட கலெக்டருக்கு கொடுத்துள்ள மனு:

ஊட்டி மத்திய பஸ் நிலையம் தூய்மை பகுதியாக அறிவிக்க வேண்டும்; தூய்மைப் பணியாளர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தி சுகாதாரத்தில் அக்கறை காட்ட வேண்டும்; ஸ்டோன் ஹவுஸ் பகுதியில் வருவாய் பணியாளர் குடியிருப்பு கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்; நகராட்சி மார்க்கெட் தூய்மை பகுதியாக அறிவிக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்; தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் அதிகமாகஉபயோகிப்பதை தடுக்க முன்னறிவிப்பின்றி அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்;

நகரில் சுற்றித்திரியும் மனநோயாளிகள் கட்டுப்படுத்த உரிய நிதியோ, அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வாகன வசதி சமூக நலத்துறைக்கு வழங்க மாநில அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும். தனியார் மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டுகின்றனர்; ஓட்டலில் மீதமாகும் உணவு பொருட்கள் கொட்டப்படுவதும், மனநோயாளிகள் அந்த உணவை உண்கின்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையத்தில் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தி காற்றோட்டமான சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு ஜனார்தனன் கூறியுள்ளார்.

Last Updated on Wednesday, 13 January 2010 06:55
 


Page 118 of 135