Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

நகராட்சி பள்ளி மாணவர்கள் போகி விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினமலர் 13.01.2010

நகராட்சி பள்ளி மாணவர்கள் போகி விழிப்புணர்வு ஊர்வலம்

கடலூர் : கடலூர் நகராட்சி மேல் நிலைப்பள்ளி என்.எஸ். எஸ்., ஜே.ஆர்.சி., பசுமைப்படை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பழனி துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் <உதவி தலைமை ஆசிரியர் மோகன்குமார், என்.எஸ்.எஸ்., அலுவலர் ரவி, ஜே.ஆர்.சி., ஆலோசகர் பாலு, பசுமைப்படை பொறுப்பாளர் புகழேந்தி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.ஊர்வலத்தில் புகையில்லாமல் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர் கள் கையில் ஏந்திச் சென்றனர்.

Last Updated on Wednesday, 13 January 2010 06:37
 

பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்று ஏற்பாடு பேப்பர் கப் உற்பத்தி தொழில் பயிற்சி

Print PDF

தினகரன் 12.01.2010

பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்று ஏற்பாடு பேப்பர் கப் உற்பத்தி தொழில் பயிற்சி

நெல்லை : பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்று ஏற்பாடாக பேப்பர் கப் உற்பத்தி தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நெல்லையில் இன்று இதற்கான நேர்காணல் நடக்கிறது என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்வளர்ச்சி நிலைய(கிளை) உதவி இயக்குனர் குட்டிராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுப்படுவ தோடு, கால்நடைகளில் உயிருக்கு ஆபத்தாகவும் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவும், பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களினால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட கலெக்டர் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்திற்கு தடைவிதித்தார். இதனால் பெரும்பாலானா பகுதியில் பேப்பர் கப், பேப்பர் பை உபயோகிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்பட்டிருக்கும் காலியிடத்தை பேப்பர் பொருட்கள் மூலம் ஈடு செய்ய வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிலையம்(கிளை) மாவட்டத்தில் பேப்பர் கப் உற்பத்தி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இன்று காலை 10 மணிக்கு எம்.எஸ்.எம்.இ டி.ஐ பேட்டை அலுவலக வளாகத்தில் பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்க நேர்காணல் நடக்கிறது. இதில் பேப்பர் கப் உற்பத்தி தொழில் தொடங்க விருப்பமுள்ள ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 12 January 2010 10:39
 

புகையில்லா போகி: மேயர் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 12.01.2010

புகையில்லா போகி: மேயர் வேண்டுகோள்

சென்னை : "சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல், புகையில்லா போகி கொண்டாட உறுதி மொழி ஏற்க வேண்டும்' என்று, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு மேயர் சுப்ரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை போகி பண்டிகை கொண்டாடப் படுவதை முன்னிட்டு, பழைய பொருட்கள், டயர், ரப்பர் போன்ற பொருட்களை எரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பு, மாசு ஏற்படு கிறது. இதைத் தவிர்க்க, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புகையில்லா போகி கொண்டாட உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி, மேயர் சுப்ரமணியன், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என, 313 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளார். இன்று காலை நடைபெறும் பள்ளி இறை வணக்க கூட்டத்தில், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் புகையில்லா போகி கொண்டாட உறுதி மொழி ஏற்பர்.

Last Updated on Tuesday, 12 January 2010 07:17
 


Page 119 of 135