Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

ராமேஸ்வரம் தீவில் பாலிதீன், பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை : அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர் 07.01.2010

ராமேஸ்வரம் தீவில் பாலிதீன், பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை : அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் ஜன.14 முதல் பாலிதீன்,பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த உள்ள தடை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. விற்பனை செய்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் ,அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட ராமேஸ்வரம் தீவுப்பகுதியை பசுமைதீவாக அறிவித்து ,இப்பகுதியில் சுற்றுச்சூழலை கெடுக்கும் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, கடந்த 2002 ல் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. துவக்கத்தில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட இத்தடையினால், பாலிதீன் பைகளை பொதுமக்கள் முற்றிலும் தவிர்த்தனர்.இதன் பின் அதிகாரிகள் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டதால், மீண்டும் பயன்படுத்த துவங்கினர். பாலிதீன் பைகளை முற்றிலும் ஒழிப்பதற்கு, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் இத்தடையை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

ராமேஸ்வரத்தில் நேற்று துணை கலெக்டர் ஜெயராமன் தலைமையில் நடந்த பாலிதீன் தடை குறித்த கூட்டத்தில், இளங்கோ ஆர்.டி.., தாசில்தார் ராஜாராமன், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி ராஜகோபால் மற்றும் பல் துறை அதிகாரிகள் , தலைமை ஆசிரியர்கள், அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில், பொங்கல் திருநாள்(ஜன.14) முதல் பாலதீன்,பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்தவும், பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரவும் முடிவு செய்யப்பட்டது. தன்னார்வ அமைப்பினரை உள்ளடக்கிய குழுவை அமைத்து, பாலிதீன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும், மண்டபத்தில் செக்போஸ்ட் அமைத்து, வாகனங்களில் பாலிதீன் பைகளை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என், துணை கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 07 January 2010 06:56
 

'போகி'க்கு பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 07.01.2010

'போகி'க்கு பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்

பெரம்பலூர்: "பெரம்பலூர் மாவட்டத்தில், "போகி' பண்டிகை அன்று பிளாஸ்டிக், ரப்பர் போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம்' என மாவட்ட கலெக்டர் விஜயகுமார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அறுவடை திருநாளை பொங்கல் திருநாளாக தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றோம். பொங்கல் முதல் நாள், "போகி' பண்டிகையாக பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடி வருவது வழக்கம்.
இந்நாளில் தமிழர்கள் திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களையும், தங்கள் வசமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவைகளையும் எரிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனர்.

இத்தகைய செயற்கை பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், ப்யூரான் மற்றும் நச்சுத்துகள்கள் ஆகியவற்றால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது.கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும் ஏற்படுகிறது. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடும் ஏற்படுகிறது. பார்க்கும் திறன் குறைபடுகிறது. இப்போன்ற காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் சட்டம் 1986 பிரிவு 15ன் படி, இது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, போகிப்பண்டிகையன்று டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவு பொருட்களை கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகித்திருநாளை மாசு இல்லாமலும், மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலையும், மக்களின் உடல்நலத்தையும் பாதுகாப்போம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 07 January 2010 06:53
 

பழனியில் பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல்

Print PDF

தினமணி 05.01.2010

பழனியில் பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல்

பழனி ஜன. 4: பழனிக்கு தற்போது ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் அதிக அளவில் வருவதால், கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் உபயோகம் அதிகமாகி உள்ளது. பயன்படுத்தப்படும் இந்த கப்புகள் தெருக்களில் வீசப்படுவதால், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் சித்திக், நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர்கள் சையது அபுதாகீர், மணிகண்டன், நெடுமாறன், மதுரை வீரன் உள்ளிட்டோர், திங்கள்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர்.

கடை வீதி, பஸ் நிலைய பகுதியிலும் பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகள் விற்கும் கடைகளில் இருந்து 13 ஆயிரம் பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

Last Updated on Tuesday, 05 January 2010 10:41
 


Page 121 of 135