Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

நாகூரில் பிளாஸ்டிக் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி 29.12.2009

நாகூரில் பிளாஸ்டிக் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி

நாகப்பட்டினம், டிச. 28: நாகையை அடுத்த நாகூரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பிளாஸ்டிக் பொருள்கள் எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன் பேரணியைத் தொடக்கி வைத்தார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். வீராசாமி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் எம். பன்னீர்செல்வம், நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் கலிபா சாகிபு, தேசியப் பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். முத்தமிழ் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு வாசகங்களுடன் பள்ளி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். நாகூர் தர்கா அருகிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் வழியே சென்று நாகூர் கடற்கரையில் நிறைவடைந்தது.

Last Updated on Tuesday, 29 December 2009 06:46
 

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த ` ஒகேனக்கல் பகுதியில் விரிவுப்படுத்தும் பணி தீவிரம்

Print PDF

மாலை மலர் 21.12.2009

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த ` ஒகேனக்கல் பகுதியில் விரிவுப்படுத்தும் பணி தீவிரம்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் தான் காவிரி தமிழ்நாட்டுக்குள் நுழையும் பகுதியாகும். மேலும் இது சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

அகண்ட காவிரியின் அழகை ரசித்து பரிசல் சவாரி செய்ய ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்வார்கள்.

தற்போது ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த சுற்றுலா வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 3 1/2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் பூங்கா, உணவு சாப்பிடும் இடம், மீன் விற்பனை கூடம், சுற்றுலா நீர்வீழ்ச்சியில் பாதுகாப்பாக குளிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடு, மற்றும் ஒகேனக்கல் அழகுப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

சுற்றுலா பயணிகள் குளிக்கும் பகுதி விரிவுப்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தற்போது இருந்த பகுதி இடிக்கப்பட்டு வரிவுப்படுத்த வனத்துறை அனுமதி வழங்காததால் பணி பாதியிலேயே நிற்கிறது.

இதனால் இந்த பகுதியில் கடந்த 5 மாதமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து ஆற்றில் குளித்து செல்கின்றனர்.

ஒகேனக்கல்லில் ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத் தியுள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

மேலும் ஒகேனக்கல் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், நடைபாதையில் உள்ள சிறு, சிறு, கடைகள் அப்புறப்படுத் தப்பட்டுள்ளது. மொத்தம் 60 கடைகள் அகற்றப்பட்டன. அங்கு கடை வைத்திருந்தவர்கள் வேறு இடத்தில் கடை வைக்க இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் (பொறுப்பு) மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு கொடுத்தனர், மேலும் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கும் மனு கொடுத்துள்ளனர்.

Last Updated on Monday, 21 December 2009 11:45
 

ஒகேனக்கல்லில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை

Print PDF

தினமலர் 21.12.2009

 


Page 123 of 135