Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

நெல்லையை பிளாஸ்டிக் குப்பை இல்லா நகரமாக்கத் திட்டம்

Print PDF

தினமணி 6.11.2009

நெல்லையை பிளாஸ்டிக் குப்பை இல்லா நகரமாக்கத் திட்டம்

திருநெல்வேலி, நவ. 5: திருநெல்வேலி மாநகராட்சியை பிளாஸ்டிக் குப்பை இல்லாத நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை சேகரித்து கொடுப்போருக்கு கிலோவுக்கு ரூ. 1 வழங்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இம் மாநகராட்சியில் மேலப்பாளையம், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், திருநெல்வேலி ஆகிய நான்கு மண்டலங்கள் மற்றும் மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகள், தெருக்கள், தனியார் இடங்கள், கால்வாய்கள் என பல்வேறு இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள் பரவிக் கிடக்கின்றன.

இவற்றில் 40 மைக்ரானுக்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகளை சேகரித்து வாரந்தோறும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மண்டல அலுவலகங்களில் கொடுக்கலாம்.

பேட்டை, பெருமாள்புரம், மகராஜநகர், தச்சநல்லூர் ஆகிய அலகு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகளை ஒப்படைத்து அதற்கான பணத்தை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். அவை எத்தனை கிலோவாக இருந்தாலும் பெற்றுக் கொள்ளப்படும். இம் மாநகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக்கும் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

Last Updated on Friday, 06 November 2009 06:16
 

பிளாஸ்டிக் பை பயன்பாடு : அரசு புது முடிவு

Print PDF

தினமலர் 04.11.2009

 

அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை

Print PDF

தினமணி 3.11.2009

அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை

திண்டுக்கல், நவ. 2: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பது தடை செய்யப்படுவதாக ஆட்சியர் மா. வள்ளலார் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கை:

பிளாஸ்டிக் பைகள், பொருள்கள் மற்றும் கழிவுகளினால் மண் வளமும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் மண்வளம் பாதிக்கப்பட்டு பயிர் விளைச்சல் குறைகிறது. பிளாஸ்டிக் பொருள்கள் மண்களில் புதைவதால் மழைநீர் பூமிக்கு அடியில் செல்வது தடுக்கப்படுகிறது. பாலித்தீன் பைகள் புதையுண்டு அழிவதற்கு 300 ஆண்டுகளுக்கு மேலாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் வெளியாகும் டையாசின்,ப்பூரான் என்ற விஷ வாயுக்கள் காற்றில் கலப்பதால் புற்றுநோய் உள்பட பல நோய்களை உண்டாக்குகின்றன. இவற்றின் நச்சுத் தன்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பூமியை விட்டு மறையாது. எனவே பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.

மாணவ, மாணவிகளிடம் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமையை விளக்குவதன் மூலம் வருங்கால சந்ததியினருக்கு வளங்கள் கிடைக்கும்.இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் வகையில் பூமிக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகப் பிளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Last Updated on Tuesday, 03 November 2009 06:56
 


Page 128 of 135