Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பயன்படுத்த கோபி நகராட்சி தடை

Print PDF
தினகரன்                   05.03.2013

பிளாஸ்டிக் பயன்படுத்த கோபி நகராட்சி தடை


கோபி, : கோபி நகராட்சி பகுதியில் 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோபி நகராட்சிபகுதிகளில் 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஜான்சன் கூறியதாவது:

40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை எளிதில் அழிக்க முடியாது என்பதால் தமிழகம் முழுவதும் பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. இதுகுறித்து அரசாணையும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு 100 ரூபாயும், வணிக நிறுவனங்களுக்கு 500 ரூபாயும்,சில்லரை விற்பனையாளர்களுக்கு  ஆயிரம் ரூபாயும், மொத்த விற்பனையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், தயாரிப்பாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மூன்று முறை அபராதத்திற்கு உள்ளானால் வியாபார உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் குற்ற வழக்கும் தொடரப்படும்.

அதே போன்று பிளாஸ்டிக் கழிவுகளை திறந்த வெளியில் போட்டு தீவைத்து எரிக்கக்கூடாது, பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் உறைகளில் தயாரிப்பாளர்கள் பெயர், பதிவு எண் மற்றும் தடிமன் குறிப்பிடவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
Last Updated on Tuesday, 05 March 2013 11:28
 

மாநகராட்சியில் 8 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை

Print PDF
தினகரன்               02.03.2013

மாநகராட்சியில் 8 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை


திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய ஆய்வில், கடைகள் மற்றும் கிடங்குகளில் இருந்து, 8 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பை, டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை விற்பனை செய்த கடை உரிமையாளர்களிடம் ரூ.23 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கை கடுமையாக இல்லாமல், பெயரளவில் உள்ளதால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பகிரங்கமாக விற்கப்படுகின்றன. இதனால் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் டம்ளர் விற்பனை அதிகமாக உள்ளது. இப்பொருட்கள் நகரில் உள்ள சாக்கடைகளை அடைத்துக் கொள்வதால், கழிவுநீர் செல்ல தடையாக உள்ளது. இவற்றை அகற்ற முடியாமல், மாநகராட்சி நிர்வாகம் திணறுவதால், நகரின் சுகாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
 
அதைத்தொடர்ந்து, மாநகராட்சி சார்பில், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் ஓட்டல்களில், 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக்பொருட்களை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகித்து வருகிறது.   
 
இருந்தாலும், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை தொடர்கிறது. இந்நிலையில், கமிஷனர் செல்வராஜ் உத்தரவின் பேரிலும், மேயர் விசாலாட்சி அறிவுறுத்தலின் பேரிலும், நகர் நலர் அலுவலர்  (பொறுப்பு) ராமச்சந்திரன், நல்லு£ர் மண்டல சுகாதார ஆய்வாளர் முரளி கண்ணன், ஆய்வாளர்கள் பிச்சை மற்றும் ஊழியர்கள் 3 மற்றும் 4ம் மண்டலங்களுக்கு உட்பட்ட கடைகள், ஓட்டல், பேக்கரி, கிடங்குகள் என 85 கடைகளில், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

இதில் 8 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பை, டம்ளர்களை பறிமுதல் செய்தனர். மேலும் 16 கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.23 ஆயிரத்து 50 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
Last Updated on Monday, 04 March 2013 12:15
 

தினமணி 02.03.2013 8 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் By திருப்பூர் First Published : 02 March 2013 04:25 AM IST திருப்பூரில் பிளாஸ்டிக் டம்ளர்கள், பைகள் உள்பட தடை செய்யப்பட்ட 8 டன் பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் வெள்ள

Print PDF
தினமணி     02.03.2013

8 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

திருப்பூரில் பிளாஸ்டிக் டம்ளர்கள், பைகள் உள்பட தடை செய்யப்பட்ட 8 டன் பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி சார்பில் இத்தகைய பிளாஸ்டிக் பொருள்களை விற்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டு, அவ்வப்போது சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கடைகளில் சோதனையிட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

 இந்நிலையில், மேயர் அ.விசாலாட்சி, ஆணையர் செல்வராஜ் உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் (பொ) ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் 3, 4 ஆம் மண்டலங்களின் வார்டுகளில் உள்ள கடைகள், ஹோட்டல், பேக்கரி, கிடங்குகள் என 85 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மொத்தம் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 8 டன் பிளாஸ்டிக் பை, டம்ளர்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 இது தொடர்பாக 16 கடை உரிமையாளர்களிடம் ரூ.23 ஆயிரத்து 50 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

  பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பார்வையிட்ட மேயர் அ. விசாலாட்சி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளில் இருந்து அவற்றை பறிமுதல் செய்வதோடு, கடுமையான அபராதமும் விதிக்கப்படும் என்றார்.

 


Page 23 of 135