Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்

Print PDF
தின மணி               21.02.2013

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்

செய்யாறில், திருவத்திபுரம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் 5 இடங்களில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே உத்தரவின் பேரில், செய்யாறில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் நிலையம், மார்க்கெட், ஆரணி கூட்டுரோடு, திருவோத்தூர் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயம், வழூர்ப்பேட்டை ஸ்ரீ பட்சீஸ்வரர் ஆலயம் ஆகிய இடங்களில், திருவண்ணாமலை மண்ணின் மைந்தர்கள் கலைக்குழுவினர் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு திருவத்திபுரம் நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர்கள் ரமணமுருகன், செல்வதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆணையர் (பொறுப்பு) பி.கே.ரமேஷ், துப்புரவு ஆய்வாளர் கே.மதனராசன், சமுதாய அமைப்பாளர் சு.ந.அம்பேத்கர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Last Updated on Thursday, 21 February 2013 12:02
 

தரமற்ற பிளாஸ்டிக் பொருள்கள்:கடைகளில் திடீர் சோதனை

Print PDF
தின மணி                   19.02.2013

தரமற்ற பிளாஸ்டிக் பொருள்கள்:கடைகளில் திடீர் சோதனை

தரமற்ற பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில்,

தருமபுரியை அடுத்துள்ள நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், இலளிகம் ஊராட்சியில் உள்ள கடைகளில் திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சற்குணம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.பிரதாபன் ஆகியோர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.

40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள்களான டம்ளர், பை உள்ளிட்ட பொருள்களை கைபற்றினர். அவற்றை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.800 அபராதம் விதிக்கப்பட்டது.
Last Updated on Thursday, 21 February 2013 11:45
 

கல்லக்குடி, புள்ளம்பாடியில் 40 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பயன்படுத்த தடை நாளை முதல் அமல்

Print PDF

தினகரன்           31.08.2012

கல்லக்குடி, புள்ளம்பாடியில் 40 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பயன்படுத்த தடை நாளை முதல் அமல்

லால்குடி, : கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கல்லக்குடி, புள்ளம்பாடி பேரூராட்சி பகுதிகளில் நாளை (1ம் தேதி) முதல் 40 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கேரி பேக், கப்புகள், விரிப்புகள் போன்றவற்றை வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் வியாபாரிகள் மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்கக்கூடாது. இதனை வாடிக்கையாளர்களும் வாங்க கூடாது. இந்த அறிவிப்பை மீறி விற்பனை செய்வோர், பிளாஸ்டிக் கழிவை தரம் பிரித்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்காத கடைகளுக்கும் முதல் எச்சரிக்கையாக ரூ.250, இரண்டாம் முறையாக ரூ.500, மூன்றாம் தடவை ரூ.1000 என அபராதம் விதிக்கப்படும்.
 
பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளருக்கு முறையே ரூ.100, 200, 500 என அபராதம் விதிக்கப்படும். மீறினால் கடைகளில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்வதுடன் கடைகளுக்கு சீல் வைத்து குற்றவியல் சட்டத்தின் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்படும். வசூலிக்கப்பட்ட அபராத தொகை பேரூராட்சி நிதிக்கணக்கில் வரவாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 


Page 25 of 135