Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

போடி நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமலர்         31.08.2012

போடி நகராட்சி எச்சரிக்கை

போடி:போடியில் பிளாஸ்டிக் கேரி பைகள், கப்புகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நகராட்சி கமிஷனர் சசிகலா தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் பழனிராஜ், வர்த்தகர்கள் சங்க செயலாளர் தனசேகரன், இணை செயலாளர் வேல்முருகன், நகராட்சி கவுன்சிலர்கள், வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
பிளாஸ்டிக் கேரி பைகள், கப்புகளை,திருமண மண்டபங்கள், கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில்,பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறி பயன்படுத்தினால், 500 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பது,என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

மட்காத பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களை மூட நடவடிக்கை

Print PDF

தினமலர்         31.08.2012

மட்காத பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களை மூட நடவடிக்கை

தேனி:மட்காத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக,சுற்றுச்சூழல் துறை இயக்குனர் தெரிவித்தார். தேனியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த, மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.உத்தமாபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார்.மாவட்ட வன அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். சுற்றுசூழல் துறை இயக்குனர் மல்லேசப்பா ஊர்வலத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
 
பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் துவக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 13 ஆயிரம் மன்றங்கள் உள்ளன. புதிதாக 5,000 மன்றங்கள் துவக்கப்படஉள்ளன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் சிறந்து விளங்கும் மாணவர்கள், கிராமம், மகளிர் மன்றங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு, பிளாஸ்டிக் ரோடு அமைக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மட்காத பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் கம்பெனிகளை மூடுவதற்கு சுற்றுசூழல் அமைச்சகத்தில் முடிவு செய்து, மாசுக் கட்டுபாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.ஓருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம், பஸ் நிலையம் வழியகா பி.சி.கான்வென்ட்டில் முடிவடைந்தது.
 

2013 முதல் பிளாஸ்டிக் பைக்கு தடை நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமலர்            30.08.2012

2013 முதல் பிளாஸ்டிக் பைக்கு தடை நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

அரியலூர்: அரியலூர் நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில், நகராட்சி பகுதியில் வரும் 2013ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர் நகராட்சி கூட்ட மன்றத்தில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு, நகராட்சி தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் பாலச்சந்தர் தீர்மானங்களை படித்தார்.இந்திய அரசின் பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதியின் படி, அரியலூர் நகராட்சி பகுதியில் வரும் 2013 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வது, அரியலூர் நகராட்சி தலைவருக்கு ஆறு லட்சம் ரூபாயில் புதிய ஜீப் வாங்குவது, அரியலூர் நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக வழங்கிட இயலாத நேரத்தில், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோத்தை தடையில்லாமல் செய்ய, 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய குடிநீர் லாரி வாங்குவது உள்பட16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பேசிய கமிஷனர் சரஸ்வதி, ""கடந்த மாதம் 23ம் தேதி பொறுப்பேற்றது முதல், எனது பணியை குறைவில்லாமல் செய்து வருகிறேன். அதில் ஏதேனும் தவறிருந்தால் நகராட்சி கவுன்சிலர்கள் எனக்கு தெரிவிக்கலாம்,'' என்று பேசினா. தொடர்ந்து நகராட்சி கவுன்சிலர்கள் பேசியதாவது:கருணாநிதி, சிவஞானம்(அ.தி. மு.க.,): அரியலூர் நகராட்சி பகு தி அருகே உள்ள மின்நகர் குடியிருப்பு பகுதிகளை அரியலூர் நகராட்சி எல்லைக்குள் இணைக்க வேண்டும். அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவி க்கும் வகையில், அரியலூர் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நுழைவு வாயில் அமைக்கவேண்டும்.குணா, மாலா (தி.மு.க.,): அரியலூர் நகராட்சி பகுதியில் உள் ள வடிகால்களை சீரமைத்து, தூ ய்மையாக பராமரிக்க நடவடிக் கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.

கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன், தலைமை எழுத்தர் ராஜேந்திரன், துப்புரவு ஆய்வாளர் செல்வமணி, ஓவர்சியர் துரைக்கண்ணு, இளநிலை உதவியாளர் கந்தசாமி, நகராட்சி துணைதலைவர் மலர்கொடி, கவுன்சிலர்கள் அமுதலட்சுமி, மாரிமுத்து, மணிவண்ணன், ராமு, பக்ருதீன், ஆனந்தி, மாலா, கோகுல், குணா, குமார், சிவஞானம், அபிராமி, லட்சுமி, ராஜேந்திரன், ஜெயலட்சுமி ராஜேந்திரன், பாபு, கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.]
 


Page 26 of 135