Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பாலிதீன் பைகளுக்கு மாற்றாக பயன்படும் புதுரக பை...சுற்றுச்சூழலுக்கு கேடு?ஆய்வுக்கு உட்படுத்த மாசுகட்டுப்பாடு வாரியம் முடிவு

Print PDF
தினமலர்           29.08.2012

பாலிதீன் பைகளுக்கு மாற்றாக பயன்படும் புதுரக பை...சுற்றுச்சூழலுக்கு கேடு?ஆய்வுக்கு உட்படுத்த மாசுகட்டுப்பாடு வாரியம் முடிவு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், தடை செய்யப்பட்டுள்ள பாலிதீன் கவர்களுக்கு மாற்றாக, மளிகை கடைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் புதுரக பைகள் வழங்கப்படுகின்றன. அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதா என ஆய்வுக்கு உட்படுத்த மாசுக்கட்டுப்பாடு வாரியம் முடிவு செய்துள்ளது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 40 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள் ளது. அதன் விற்பனையை தடுத்தால், பயன்பாடு வெகுவாக குறையும் என்பதற்காக, கடைகளிலும், ஓட்டல்களிலும் ஆய்வு நடத்தி, அபராதமும் விதிக்கப்படுகிறது. காலம் கடந்த நடவடிக்கையாக இருந்தாலும், கடைகளிலும், ஓட்டல்களிலும் பாலிதீன் பயன்பாடு குறைந்து வருகிறது. பாலிதீன் பைகளுக்கு மாற்றாக, மளிகை கடைகளிலும், பேக்கரிகளிலும், "போம்' துணி போன்ற ஒரு வகை துணியில் தைக்கப்பட்ட புதுரக பைகள் வழங்கப்படுகின்றன.

வாடிக்கையாளரிடம் ஒன்று முதல் மூன்று ரூபாய் வரை பெற்றுக்கொண்டு, அவ்வகை பை கொடுக்கப்படுகிறது. இவை, எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல், பயன்பாட்டுக்கு வந்துள்ளன. "திருப்பூர் பிளாஸ்டிக் மற்றும் ஜெனரல் மெர்ச்சன்டர்ஸ் அசோசியேஷன்' நிர்வாகி கள், அத்தகைய பைகள், "ஆபத்தை விளைவிப்பவை,' என, மேயர், துணை மேயரிடம் நேற்று முறையிட்டனர்.அவர்கள் கூறுகையில், "பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளில், 40 மைக்ரானுக்கும் அதிகமானவற்றை பயன்படுத்த கோர்ட் அனுமதித்துள்ளது. அவ்வகை பொருட்களை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தலாம். ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், எவ்வித பரிசோதனையும் செய்யாமல், மொத்தமாக அள்ளிச்செல்கின்றனர். பேப்பர் சேகரிக் கும் நபர்கள், 40 மைக்ரானுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, கிலோ 30 ரூபாய்க்கு விற்கின்றனர்."தற்போது, மாநகராட்சி பகுதிகளில், தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களுக்கு மாற்றாக, புதுரக பைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவ்வகை பைகளும் பாலிதீன் கலவையால் உருவாக்கியவை. மண்ணில் மக்காமல், தங்கியிருந்து, நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும். மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும், 40 மைக்ரானுக்கு அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை விற்க அனுமதிக்க வேண்டும்,' என்று முறையிட்டனர்.

மேயர் விசாலாட்சி கூறுகையில்,""சுகாதாரத்துக்கு சவாலாக உள்ள அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட உள்ளது. மாற்றாக, வேறு பைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக, உற்பத்தியாளர்களிடம் இருந்து புது ரக பைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ""அவ்வகை பைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்குமா என்று மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் ஆலோசனை பெறப்படும். அதற்காக, வாரிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது. பொதுமக்களுக்கும், சுகாதாரத்துக்கும் ஆபத்து விளைவிக்காத பொருட்கள் :மட்டும் அனுமதிக்கப்படும்,'' என்றார்.மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (பொறுப்பு) உலகநாதனிடம் கேட்டபோது,""பாலிதீன் பைகளுக்கு மாற்றாக வந்துள்ள பைகள், எவ் வகையில் தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து ஆராயப்படும். உள் ளாட்சி அமைப்புகளில் இருந்தும், மாவட்ட நிர்வாகத்தில் இருந்தும் கருத்து கேட்கும்போது, முழுமையாக ஆராய்ச்சி செய்து, விரிவாக அறிக்கை அளிக்கப்படும்,'' என்றார்.
Last Updated on Thursday, 30 August 2012 09:54
 

பிளாஸ்டிக் பை பயன்பாடு குறித்து செப். 14 வரை கண்காணிப்பு பேரூராட்சி அதிகாரி அறிக்கை

Print PDF

தினகரன்      27.08.2012

பிளாஸ்டிக் பை பயன்பாடு குறித்து செப். 14 வரை கண்காணிப்பு பேரூராட்சி அதிகாரி அறிக்கை

மண்ணச்சநல்லூர், :சா.கண்ணனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பை பயன்படுத்துகின்றனரா என்பதை வரும் செப்டம் பர் 14ம் தேதி வரை கண்காணிக்கப்படும் என்று நிர் வாக அதிகாரி தெரிவித்துள் ளார்.

சா.கண்ணனூர் பேரூ ராட்சி நிர்வாக அதிகாரி கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: சா.கண்ணனூர் பேரூராட்சியில் கடந்த 1.5.2012 முதல் 40 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள பிளா ஸ்டிக் பொருட்கள் விற் பனை செய்வது, பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதைமீறி விற் பனை மற்றும் பயன்படுத்து வது கண்டறியப்பட்டு இது வரை ரூ.42, 700 அபராதம் விதிக்கப் பட்டு பேரூராட்சி பொது நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க அனைத்து சிறு வியாபாரி கள் மற்றும் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கு கடி தம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு எதி ராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு இடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. பேரூராட்சிக்கு வருகை தரும் பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. பேரூ ராட்சி தலைவர், செயல் அலுவலர், மன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக் கள் கலந்து கொண்ட மனித சங்கிலி விழிப்புண ர்வு பேரணி நடத்தப்பட் டது. வரும் 14ம் தேதி வரை தொடர் கண்காணிப்பு, 15ம் தேதி பேரூராட்சி பகுதியில் முற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.
Last Updated on Monday, 27 August 2012 10:20
 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி             25.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போளூர், ஆக. 24: போளூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.பேரணியை மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து போளூர் பேருந்து நிலையம் அருகே மனிதச் சங்கிலி நடைபெற்றது.

பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (வேலூர் மண்டலம்) மலையமான் திருமுடிக்காரி, செயல் அலுவலர் நிஷாத், பேரூராட்சித் தலைவர் என்.கே.பாபு, துணைத் தலைவர் செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன், டிஎஸ்பி முகமது பலுலுல்லா, காவல் ஆய்வாளர் செல்வழகன், மண்டலத் துணை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, சமுகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் ஜெயந்தன், அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் பள்ளித் தலைûயாசிரியர்கள் வாசு, முருகேசன், இளநிலை உதவியாளர்கள் அருண்குமார், பன்னீர்செல்வம், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 


Page 27 of 135