Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர்     23.08.2012

கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கரூர்: கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். '

பஞ்சாயத்து துணைத்தலைவர் பெரியசாமி, செயல் அலுவலர் சுந்தரம், அலுவலர் இந்திரஜித் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.குளித்தலையில் நடந்த பேரணியை நகராட்சி தலைவர் பல்லவி ராஜா கொடி யசைத்து துவக்கி வைத்தார்.

அன்னை நாமகிரி மழலையர் துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், பேராளம்மன் தெரு, பஜனமடம், காவிரி நகர், அக்ரஹாரம், கடைவீதி ஆகிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். நகராட்சி கமிஷனர் கலைமணி, கவுன்சிலர் ராதிகா, பள்ளி தாளாளர் கஸ்துரிரங்கன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மருதூர் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி தலைவர் சம்பத் தலைமையில் நடந்தது. பேரணியில் துணைத்தலைவர் அம்பிகா, செயல் அலுவலர் சண்முகம், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், கவுன்சிலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

நங்கவரம் டவுன் பஞ்சாயத்து சார்பில் டவுன் பஞ்சா யத்து தலைவர் மாரிமுத்து தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. செயல் அலுவலர் முகமதுரசீத், கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், மகளிர்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

வேலாயுதம்பாளையத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி ஊர்வலம் நடந்தது. பேரணியை புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லலிதா கொடி யசைத்து துவக்கி வைத்தார்.செயல் அலுவலர் சுப்ரமணியம், துணைத்தலைவர் கௌசல்யாதேவி, பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

 

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க தாளியூர் பேரூராட்சி தீர்மானம்

Print PDF

தினமலர்           23.08.2012

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க தாளியூர் பேரூராட்சி தீர்மானம்

பேரூர்:""பொதுமக்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்'' என, தாளியூர் பேரூராட்சியில், தீர்மானிக்கப்பட்டுள்ளது.தாளியூர் பேரூராட்சி அலுவலகத்தில், கவுன்சிலர்கள் மன்றக் கூட்டம், நேற்று முன் தினம், நடந்தது.தலைவர் புனிதன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், ஜூலை மாதத்திய கேட்பு, வசூல் நிலுவைப்பட்டியல், பிறப்பு, இறப்பு பதிவுகள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., நிதியின் மூலம், தாளியூர் பேரூராட்சி 9ம் வார்டில், நான்கு லட்சம் ரூபாயில் மேல்நிலைத்தொட்டி, கலிக்கநாய்க்கன்பாளையம் கீழ்ச்சித்திரைசாவடியிலுள்ள, வெங்கடேஷ் தோட்டம் முதல் மாமரத்து வயல்வரை, ஏழு லட்சம் ரூபாயில் தார்சாலை அமைத்தல், நான்கு லட்சம் ரூபாயில் கலிக்கநாய்க்கன்பாளையத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஜூலை மாதத்தின் செலவுச் சீட்டுகள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இறுதியில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டுமெனவும், பேரூராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பை மீறி, பயன்படுத்துவோர் மீது, அபராதம் விதிக்கப்படுமெனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. துணைத்தலைவர் ரங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி மனிதச் சங்கிலி

Print PDF

தினமணி                  22.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி மனிதச் சங்கிலி

செங்கம், ஆக. 21: செங்கம் பேரூராட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச்சங்கிலியில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

செங்கம் பேரூராட்சி, ஸ்ரீ வாசவி கிளப் ஆகியவை இணைந்து மில்லத் நகர் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சென்னம்மாள் முருகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மோகன்ராஜ் வரவேற்றார்.

வேலூர் மண்டல் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மலையமான் திருமுடிகாரி, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதி மொழியை வாசித்தார். ஸ்ரீ வாசவி கிளப் தலைவர் சுதாகரன், செயலர் பிரகாஷ்பாபு, கௌரவத் தலைவர் பாபு, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஆசைமுசிரஅகமத் உள்பட செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Last Updated on Wednesday, 22 August 2012 11:02
 


Page 30 of 135