Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி   20.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர், ஆக. 19: பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.

பேரணியை  தொடக்கி வைத்து, பேரூராட்சி தலைவர் என். பாப்பம்மாள் பேசியது:

பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் ஒழிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி சிறு வியாபாரிகள், பூக்கடைக்காரர்கள், காய்கறி வியாபாரிகள்,  மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோரை அழைத்து பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு குறித்து மாணவ, மாணவிகளிடையே பேச்சு, கட்டுரை,   போட்டிகளும், கலை நிகழ்ச்சிகள்,  தெருமுனை பிரசாரம் ஆகியவை நடத்தப்பட்டுள்ளன.எனவே, குரும்பலூர் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றார் அவர். குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி, பிரதான சாலைகள் வழியே சென்று பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதில், துணைத் தலைவர் செந்தில்குமார், செயல் அலுவலர் ஆறுமுகம், பேரூராட்சி உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினமலர்             20.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

எட்டயபுரம்:எட்டயபுரம் மாரியப்பா நடுநிலைப்பள்ளியில் டவுன் பஞ்.,சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.சிறப்பு கருத்தரங்கம் முகாமிற்கு டவுன் பஞ்.,தலைவர் கோவிந்தராஜ பெருமாள் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் ரெஜினால்டு சேவியர் வரவேற்றார். மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் பொருட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கம் சிறப்பு முகாம் நடந்தது. ஆசிரியை செல்லத்தாய் நன்றி கூறினார்.
Last Updated on Monday, 20 August 2012 07:23
 

இலஞ்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கலி

Print PDF

தினமலர்             20.08.2012

இலஞ்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கலி

குற்றாலம்:இலஞ்சி டவுன் பஞ்., பகுதியில் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் அடிப்படையிலும், டவுன் பஞ்., உதவி இயக்குனர் ஆலோசனையின்படியும் இலஞ்சி டவுன் பஞ்., பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் அனைத்து கடைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையாக இலஞ்சி பகுதியில் பிளாஸ்டிக்கை ஒழிப்பது என்பதை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது.டவுன் பஞ்., தலைவர் காத்தவராயன், செயல் அலுவலர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் ராமச்சந்திரன், கவுன்சிலர்கள் சித்திரைகுமார், சுப்பிரமணியன், சிவக்குமார், மாரியம்மாள், கணேசன், சங்கர், ராஜமாணிக்கம், வள்ளியம்மாள், பார்வதி, முருகன் மற்றும் சுகாதார ஆய்வாளர் குளத்தூரான், செல்லக்குமார், நாராயணன், மாரியப்பன், அலுவலக உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 20 August 2012 07:22
 


Page 31 of 135