Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை பயன்படுத்தினால் அபராதம்

Print PDF

தினகரன்              17.08.2012

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை பயன்படுத்தினால் அபராதம்

உசிலம்பட்டி, : எழுமலை பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் எழுமலை பேரூராட்சி பகுதியில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தன.

இதையடுத்து, பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தடை விதிப்பது குறித்து சிறு வியாபாரிகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்களின் உரிமையாளர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர், கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவகலத்தில் நடந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீறி பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. கூட்டத்தில், பேரூராட்சி தலைவர் சித்ராபாண்டியன், செயல் அலுவலர் கண்ணன், துணைத்தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் அலுவக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 17 August 2012 11:08
 

எழுமலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: தலைவர் சித்ரா பாண்டியன் அறிவிப்பு

Print PDF
மாலை மலர்              16.08.2012

எழுமலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: தலைவர் சித்ரா பாண்டியன் அறிவிப்பு
எழுமலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: தலைவர் சித்ரா பாண்டியன் அறிவிப்பு

உசிலம்பட்டி, ஆக. 16-மதுரை மாவட்டம் எழுமலை பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் குறிப்பாக 40 மைக்ரான் தடிமன் அளவுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பைகள் சுற்று சூழலுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாலும், பிளாஸ்டிக் பைகளை அறவே பயன் படுத்தாத நிலையினை உருவாக்கிட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரூராட்சி இயக்குனரால் வழங்கிய அறிவுரையின்படி இப்பேரூ ராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் ஒழிப் பதற்கான தீர்மானம் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
 
இதனை தொடர்ந்து பேரூராட்சி பகுதியுள்ள சிறு வியாபாரிகள், தெரு வியாபாரிகள், பூக்கடைக் காரர்கள், காய்கறிகடைகள், ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் ஆகி யோர்களுடன் பிளாஸ்டிக் கழிவுகளை ஒழித்திட விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டு 15-ந்தேதி முதல் பயன்படுத்த மாட்டோம் எனவும், எங்களது முழு ஒத்துழைப்பை வழங் குவதாகவும் தெரிவித்தனர். பேரூராட்சி பகுதியில் உள்ள சுயஉதவிக்குழுக்கள் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
 
மேலும் பள்ளி மாணவ- மாணவிகளிடையே பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் மூலம் பிளாஸ் டிக் பயன்பாடு தீமைகள், விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இப்பேரூராட்சி பகுதியில் நேற்று (புதன்கிழமை) முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என பேரூராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் சித்ரா பாண்டியன், செயல் அலுவலர் கண்ணன், துணைத்தலைவர், மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினமணி            14.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

பொன்னேரி, ஆக. 13: மீஞ்சூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி ஆகியவை அண்மையில் நடைபெற்றது.

÷முகாமுக்கு, திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூராட்சித் தலைவர் சுப்பிரமணி, பொன்னேரி கோட்டாட்சியர் கந்தசாமி, மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ÷முகாமில், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து விளக்கி கூறப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்பணர்வுப் பேரணியை பேரூராட்சித் தலைவர் சுப்பிரமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

÷பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இப்பேரணி தேரடித் தெரு, காந்தி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாகச் சென்று பேரூராட்சி அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.

÷முகாம் மற்றும் பேரணியில் மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அசோக், மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் சிங்காரவேலு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவைச் செயலர் சேக்அகமது, வார்டு உறுப்பினர்கள் தேசிங்குராஜன், சுரேஷ், சித்திக்பாஷா, உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 14 August 2012 10:41
 


Page 34 of 135