Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் 16ல் தாக்கல்

Print PDF

தினகரன் 06.08.2010

பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் 16ல் தாக்கல்

பெங்களூர், ஆக. 6: பெருநகர் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்தும் இன்னும் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இருப் பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2006 நவம்பர் மாதம் தொடங்கி கடந்த மே மாதம் வரை 41 மாதங்கள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், இருந்த மாநகராட்சிக்கு தேர்தல் நடத்திய புதிய மேயர் மற்றும் துணை மேயர் பதவியேற்று செயலாற்றி வருகிறார்கள். இதுவரை நான்கு முறை மாமன்ற கூட்டமும் நடந்துள்ளது. மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்ய வசதியாக சதாசிவாவை நிதி மற்றும் வரி நிலைக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடன் 7 உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி நிதி நிலைக்குழு தலைவராக பொறுப்பேற்ற சதாசிவா, ஜூலை முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வேன் என்று அறிவித்தார். இதற்கு வசதியாக மாநகராட்சியின் அனைத்து துறை அதிகாரிகளுடனும் வேகமாக ஆலோசனை நடத்தினார். இடையில் பட்ஜெட் தாக்கல் குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, ஆகஸ்ட் 9ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதாக சதாசிவா தெரி வித்தார். ஆனால், தற்போது மாந கராட்சி வட்டாரத்தில் விசாரித்ததில் வரும் திங்கட்கிழமை 16ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும் ஏற்பாடு எதுவுமில்லை என்பது தெரியவந்தது.

மேயர் எஸ்.கே.நடராஜ் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் அமைந்து கடந்த வாரத்துடன் 100 நாட்கள் முடிந்துள்ளது. இன்னும் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் காலம் கடத்துவது மாநகரின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாநகராட்சி நிர்வாகம் அமைந் 1397776754 3மாதம் கடந்து நான்காவது மாதம் தொடர்கிறது. மேயர் எஸ்.கே.நடராஜ் தலைமையிலான நிர்வாகம் இன்னும் 8 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடிக்கும். இப்போது பட்ஜெட் தாக்கல் செய்தாலும், அதில் அறிவிக்கும் திட்டம் செயல்பட சில மாதங்கள் தேவைப்படும். இதில் மேயர் நடராஜ் தனது பதவி காலத்தில் எந்த சாதனையும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பது மக்களின் கருத்தாகவுள்ளது.

மாநகராட்சியில் இதுவரை நிதி மற்றும் வரி நிலைக்குழுவை தவிர வேறு நிலைக்குழு தலைவர்கள் நியமனம் செய்யவில்லை. தற்போது நிலைக்குழுவின் எண்ணிக்கையை 12 வரை உயர்த்த ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதால், காலியாகவுள்ள 11 குழுக்களுக்கு உடனடியாக தலைவர்கள் நியமனம் செய்தபின், பட்ஜெட் தாக்கல் செய்ய மேயர் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. மாநகராட்சி வட்டார கணிப்பின் படி இம்மாதம் 16ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.