Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏழைகளுக்கான மாநகராட்சி பட்ஜெட்

Print PDF

தினகரன் 30.08.2010

ஏழைகளுக்கான மாநகராட்சி பட்ஜெட்

பெங்களூர், ஆக. 30: பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஏழைகள¢ நலன்சார்ந்ததாக பட்ஜெட் இருக்கும் என்று பெங்களூர் பொறுப்பு அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்தார்.

பெங¢களூர் மாநகராட்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 மாதங்கள் கழிந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் பணிகள் இழுபறியில் இருந்தன. ஒருவழியாக இன்று மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மதியம் 12 மணிக்கு நிதிக்குழு தலைவர் சதாசிவா பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு மேயர் நடராஜ், துணைமேயர் தயானந்த், பெங்களூர் பொறுப்பு அமைச்சர் அசோக், மாநகராட்சி கமிஷனர் சித்தய்யா, நிதிக்குழு தலைவர் சதாசிவா ஆகியோர் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். மாநகராட்சியிலுள்ள ஒவ்வொரு வார்டுக்கும் மேம்பாட்டு நிதியாக தற்போது ரூ.1 கோடி ஒதுக்கப்படுகிறது. கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று அந்த தொகையை ரூ.2 கோடியாக உயர்த்தலாம் என்று ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னி¢ட்டு நிதிக்குழு அதிகாரிகள் பட்ஜெட் வடிவமைப்பை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பட்ஜெட் குறித்து அமைச்சர் அசோக் கூறியதாவது: மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே பெங்களூரின் பல பகுதிகளிலும் மக்கள் பெரும் பிரச்னைகளை சந்திப்பது வழக்கமாகிவருகிறது. நகரில் போக்குவரத்து நெரிசல், காற்றுமாசடைதல் உள்ளிட்ட பிரச்னைகளும் அதிகரித்துள்ளன. இப்பிரச் னைகளுக்கு நிரந்தர தீர்வு காணுவதற்கு மாநகராட்சி பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்படும். நாட்டின் அழகான நகராக பெங்களூரை மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். அதற்காக பாஜ அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மெட்ரோ ரயில், மேம்பாலங்கள் அமைப்பது, கீழ்பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை பாஜ ஆட்சியில் செய்துவைத்துள்ளோம்.

பெங்களூர் மாநகராட்சி தற்போது பாஜ வசமுள்ளது. எனவே இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் செயல்படுத்தாத பல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். குறிப்பாக ஏழை மக்களின் நலன் காக்கும் பட்ஜெட்டாக இருக்கும் என்றார்.