Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது

Print PDF

தினகரன் 31.08.2010

மாநகராட்சி பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது

பெங்களூர், ஆக. 31: பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் மக்களின் நம்பிக்கையை பொய்யாக்கி உள்ளது என்று ஸ்ரீசாய் கோல்டுபேலஸ் உரிமையாளர் டி..சரவணா கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்களை திசை திருப்பவும், பிரசாரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி உள்ளது. . முதல்முறையாக வியாபாரிகளுக்கும் வரி விதிப்பதன் மூலம் வர்த்தகர்களுக்கு சுமையை அதிகரித்து உள்ளார். பிரச்னைகளுக்கு நிரந்தரதீர்வு காணாமல் காப்பீட்டு திட்டத்தை நடைமுறைக்கு தருவதன் மூலம் ஆட்டோ டிரைவர்கள், பி.பி.எல் கார்டுதாரருக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. வார்டுகளின் வளர்ச்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லாத தரமற்ற பட்ஜெட் இது. பெங்களூர் மாநகராட்சி அதிகாரத்திற்கு வந்த 5 மாதங்களில் செலவு மட்டுமே அதிமாக உள்ளது.

ஆனால் சாதனை பூஜ்யமாக உள்ளது. ஏற்கனவே ரூ 2600 கோடி கடன் உள்ளது. இதனை தீர்க்காமல் எப்படி மாநகராட்சியை மேம்படுத்துவார் என்பது தெரியவில்லை. காந்திபஜாரில் வணிக வளாகம், வாகன நிறுத்துமிடம் போன்ற திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும். இதனை நான் வரவேற்கிறேன். மேலும் தற்போது அறிவித்துள்ள திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும் இதனால் பொதுமக்களுக்கு உபயோகமாக இருக்கும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.