Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்

Print PDF

தினமணி 31.08.2010

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்

பெங்களூர், ஆக.30: நகர மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத பட்ஜெட்டாக மாநகராட்சி பட்ஜெட் உள்ளது என்று மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் எம்.நாகராஜ் தெரிவித்தார்.

திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் குறித்து அவர் கூறியதாவது:

÷பாஜக முதன் முதலில் மாநகராட்சி நிர்வாகத்தை கைப்பற்றி உள்ளது. இதனால் நகரில் பல வளர்ச்சித் திட்டங்களை இந்த நிர்வாகம் கொடுக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏமாற்றத்தையே இந்த பட்ஜெட் அளித்துள்ளது. பட்ஜெட்டில் தொலைநோக்குப் பார்வையில்லை. இதனால் வரும் ஆண்டுகளில் நகர வளர்ச்சி பூஜ்ஜியமே.

பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பவில்லை. சமுதாயத்தின் எந்த பிரிவினருக்கும் சலுகைகள் அறிவிக்கப்படவில்லை. மாநகராட்சி தற்போது வாங்கியுள்ள கடன் தொகை, அதற்கான வட்டி ஆகியவை குறித்து அறிவிக்கப்படவில்லை. ஆனால் இப்போது சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதன் மூலம் மாநகராட்சி திவால் ஆகும் சூழ்நிலை ஏற்படும்.

மாநகராட்சிக்கு மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துவிட்டன. இந்த நிர்வாகத்தின் பதவிக்காலம் இன்னும் 7 மாதங்கள்தான் உள்ளன. இதற்குள் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை இந்த நிராவகம் நிறைவேற்றபோகிறது என்றார் அவர்.