Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பட்ஜெட் தயாரிப்பு பணி மும்முரம்: தொற்றுநோய்க்கு புதிய மருத்துவமனை

Print PDF
தினமலர் 03.02.2010

மாநகராட்சி பட்ஜெட் தயாரிப்பு பணி மும்முரம்: தொற்றுநோய்க்கு புதிய மருத்துவமனை

சென்னை: சென்னை மாநகராட்சி சார் பில், தென்சென்னையில் மாடம் பாக்கத்தில் நவீன தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும். அதுபோல், இந்தாண்டு மார்ச் மாதம் பட்ஜெட் வெளியிட வசதியாக மேயர், கமிஷனர், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதோடு கமிஷனர், பல்வேறு துறை அலுவலர்களுடன் தனித் தனியே ஆலோசனைக் கூட்டங் களை நடத்தி வருகிறார். கடந்த 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருவாய், 979.02 கோடி ரூபாயாகவும், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் வகையில் 975.08 கோடி செலவாக வும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மூலதனச் செலவு கணக்கில், 518.75 கோடி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில், இதுவரை 350 கோடிக்கு செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும், மேலும் உள்ள இரண்டு மாதங்களில் நிறைவேற்றும் பணிகளுக்கு மூலதனச் செலவு 500 கோடி ரூபாயை நெருங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வெளியிடப்பட உள்ள 2010 - 11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மாநகராட்சியின் வருவாய் ஏறத் தாழ 950 கோடி ரூபாய் அள விற்கும், செலவினம் 930 முதல் 950 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில், வரும் பொதுத் தேர்தலை கணக்கில் கொண்டு, சொத்துவரி உயர்வு ஏதும் இல்லாத பட்ஜெட்டாக இருக்கும் என்றும், அதே சமயத்தில் கவர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லாத வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மாநகராட்சி நிதிநிலை மிகவும் கடுமையான நெருக்கடியில் இருப்பதால், புதிய திட்டங்கள் அதிக அளவில் இருக்காது என்றும் கூறப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில், சொத்துவரி 350 கோடி ரூபாய் அளவிற்கு வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இதுவரை, 260 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்யப் பட்டுள்ளதாகவும், மேலும் உள்ள இரண்டு மாதங்களில், ஏறத்தாழ 325 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துவரி வசூலிக்கப் படலாம் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதுபோல், வரும் பட்ஜெட் டில் 350 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துவரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்க திட்டமிடப்பட் டுள்ளது. சுகாதாரத் துறைக்கும், கல்வித்துறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வடசென்னையில் தண்டையார் பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை இருப்பது போல், தென்சென்னையில் நவீன தொற்று நோய் தடுப்பு மருத்துமவனை கட்ட, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது. தண்டையார்பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துமவனை 13 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், தென்சென்னைக்கு தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனை அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, மாடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், நவீன தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை கட்ட மாநகராட்சி திட்டமிட் டுள்ளது. சாலைகள் சீரமைக்க வரும் பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், பாலங் கள் துறைக்கு இந்தாண்டு முக்கியத்துவம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
Last Updated on Wednesday, 03 February 2010 06:42