Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்டவையே இந்த ஆண்டு முக்கிய திட்டங்கள் : மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில்

Print PDF

தினமலர் 25.03.2010

சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்டவையே இந்த ஆண்டு முக்கிய திட்டங்கள் : மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில்

மதுரை: மதுரை மாநகராட்சியின் வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று மேயர் தாக்கல் செய்தார். அதில் 2010-11ம் ஆண்டுக்கான முக்கிய திட்டங்கள் என அறிவிக்கப்பட்டவை:

1.மண்டல நிர்வாக அலுவலகங்களின் கட்டுமான பணிக்காக 2.50 கோடி ரூபாய் செலவிடப்படும்.2.2.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் நவீனப்படுத்தப்படும்.3.மூலக்கரை மற்றும் கக்கன் காலனிகளில் 1.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துப்புரவு பணியாளர்களுக்கு குடியிருப்புகள் அமைக்கப்படும்.4.பூங்காக்களை மேம்படுத்த 2.40 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.5.கம்ப்யூட்டர் மூலம் குடிநீர் மேல்நிலை தொட்டிகள் மற்றும் வால்வுகளை இயக்க 3.18 கோடி ரூபாய் செலவிடப்படும்.6.கழிவு மண்ணை அகற்ற 16 இயந்திரங்கள் வாங்க 1.10 கோடி ரூபாய் செலவிடப்படும்.
7.
மேலக்கால், மணலூர் நீரேற்று நிலையத்தில் ஜெனரேட்டர் வசதி செய்ய 0.65 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

8.
ஒவ்வொரு கவுன்சிலருக்கும் வார்டு மேம்பாட்டு நிதியாக தலா 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும். இவை தவிர, மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி பூங்காக்கள், மின் விளக்குகள், சென்ட்ரல் மார்க்கெட் இருக்கும் இடத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், தெற்கு மண்டல அலுவலகம் உள்ள கோட்டையை பழமை மாறாமல் புதுப்பித்தல், மாரியம்மன் தெப்பக் குளத்தைச் சுற்றி அழகுபடுத்துதல் உள்பட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இவை எல்லாமே சென்ற ஆண்டு பட்ஜெட்டிலும் இடம் பெற்ற அறிவிப்புகள்.

Last Updated on Thursday, 25 March 2010 09:17