Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 50 லட்சம் பற்றாக்குறை

Print PDF

தினமணி 29.04.2010

ரூ. 50 லட்சம் பற்றாக்குறை

புதுக்கோட்டை, ஏப். 28: புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் நிகழாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ. 50 லட்சம் பற்றாக்குறை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் நகர்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் உ. ராமதிலகம் தலைமை வகித்தார். ஆணையர் கே. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், 2009-2010-ம் நிதியாண்டின் திருந்திய வரவு செலவுத் திட்ட அறிக்கை மற்றும் 2010-2011-ம் நிதியாண்டின் வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 2009-10 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வரவாக ரூ. 1341.62 லட்சமும், செலவாக ரூ. 1295.39 லட்சமும், மிகுதி இருப்பு ரூ 46.23 லட்சம் எனவும் 2010-11 ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வரவாக ரூ. 1,459.04 லட்சமும், செலவாக ரூ. 1,510 லட்சமும் பற்றாக்குறை தொகை ரூ. 50.96 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:

ஆறுமுகம்: ""2009-10-ல் ரூ. 46 லட்சம் மீதமிருக்கும் நிலையில்,அடுத்த ஆண்டில் ரூ. 50 லட்சம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க தொழில் வரி மற்றும் வரிவிதிக்கத்தக்க இனங்களுக்கு வரி விதிப்பு மூலம் வருவாய் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியமாகும்?''

ஆணையர்: ""கடந்த ஆண்டைவிட ரூ. 50 லட்சம் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு ஐஹெச்டிபி திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கியதுதான் முக்கிய காரணம். அடிப்படை வசதிகள் செய்யவும் நகர்புற ஏழை மக்களின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் வகையில் சொத்து வரிகேட்பு மற்றும் இதர செலவினங்களை கருத்தில் கொண்டு இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.''

ஆறுமுகம்: ""சொத்து வரி, வீட்டு வரி வசூலில் தீவிரம் காட்டுவதை விட வரிவிதிக்கத்தக்க இனங்களில் உள்ள 300 பேரிடம் செலுத்த வேண்டியதை வசூல் செய்தால் ரூ. 1.5 கோடி வசூலாகும். மேலும், வணிக நிறுவனங்களுக்கான 80 சத வரி உயர்வைக் குறைக்க வேண்டும்.''

சண்முக பழனியப்பன்: ""கடந்த ஆண்டில் நகர்மன்றத் தலைவர் வெளிநாடு சென்றிருந்தபோது துணைத் தலைவர் க. நைனாமுஹம்மது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு 5 சதம் கூடுதல் தொகை வைத்து ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், நகர்மன்றத் தலைவர் நாடு திரும்பியவுடன் அந்த தீர்மானத்தை சிறப்புக்கூட்டம் போட்டு ரத்து செய்தார். அதுபோல கூடுதல் வரி விதிப்பிலும் அக்கறை செலுத்தி வரியைக் குறைக்கலாம்.''

தலைவர்: ""வரியைக் குறைக்க முடிந்தவரை முயற்சி எடுக்கப்பட்டது, மேலிடத்துக்குச் சென்று விட்டதால் எதுவும் செய்ய முடியாது. நடந்து முடிந்ததை பேசக் கூடாது.''

கருணாகரன்: ""நகராட்சி வாயிலில் நகராட்சி ஒப்பந்தகாரர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு எதை எடுத்தாலும் பணம், பணம் எனக் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறீர்கள்?''

தலைவர்: ஒப்பந்தகாரர்கள் எதற்கெடுத்தாலும் பணம் கேட்பதாக கூறுகிறார்கள் என்றால் அவர்கள் ஏன் ஒப்பந்தம் எடுóக்கிறார்கள்? பேசாமல் போய்விட வேண்டியதுதானே? வீண் பழிக்குப் பதிலளிக்கத் தேவையில்லை.''

லியாகத்அலி: ""நகரின் மையப் பகுதியில் இருக்கு நைனாரிக்குளத்தை தூர்வார வேண்டும். குளத்தில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க வேண்டும்.''

இப்ராஹிம்பாபு: ""பல்லவன் குளத்தை தூய்மையாக வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

சந்திரசேகரன்: ""இந்த நிதிநிலை அறிக்கையில் அம்மையாபட்டி குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. குறைந்தபட்சம் 2 ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கத் தேவையான நிதி ஒதுக்க வேண்டும்.'' இவ்வாறு விவாதம் நடைபெற்றது.