Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய சென்ட்ரல் மார்க்கெட் கடைஉள்வாடகைக்கு விட எதிர்ப்பு

Print PDF

தினமலர் 06.05.2010

புதிய சென்ட்ரல் மார்க்கெட் கடைஉள்வாடகைக்கு விட எதிர்ப்பு

மதுரை: மதுரை சென்ட்ரல் மார்க்கெட் மேட்டுப்பகுதி மொத்தம் மற்றும் சில்லரை காய்கனி வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் தலைவர் சிவனேசன் தலைமையில் நடந்தது. செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். பொருளாளர் செல்வம், சட்ட ஆலோசகர் பழனிகுமரன் முன்னிலை வகித்தனர்.தீர்மானங்கள் குறித்து சிவனேசன் கூறியதாவது : மாநகராட்சி தீர்மானத்தின்படி, எங்கள் உறுப்பினர்களின் கடை ஒன்றிற்கு மாத வாடகை 700 ரூபாய், அட்வான்ஸ் 50,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அட்வான்ஸ் தொகையை இரு தவணைகளாக செலுத்த அனுமதிக்க வேண்டும். புதிய மார்க்கெட்டில் சங்கம் ஒன்றுக்கு 5000 சதுர அடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அனைத்து சங்கங்களுக்கும் தனித்தனி கடைகள் ஒதுக்கப்படும் போது, அந்த சங்கத்திற்கு மட்டும் இடம் ஒதுக்குவது குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த இடத்தில் கடைகளை கட்டி, உள்வாடகைக்குவிட்டு, வியாபாரிகள் அல்லாதவர்கள் கூட வியாபாரம் செய்ய வழி ஏற்படும். மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றார்.

Last Updated on Thursday, 06 May 2010 07:30