Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விருதுநகரில் நீடிக்கும் பிரச்னைகள்: நகராட்சிக்கு நிதிப் பற்றாக்குறை

Print PDF

தினமணி 02.06.2010

விருதுநகரில் நீடிக்கும் பிரச்னைகள்: நகராட்சிக்கு நிதிப் பற்றாக்குறை

விருதுநகர், ஜூன் 1: விருதுநகரில் குடிநீóர், சுகாதாரப் பிரச்னைக்கு முழுமையாகத் தீர்வு காண இயலாததற்கு, நிதி பற்றாக்குறையே காரணம் என்று நகராட்சித் தலைவர் கார்த்திகா கூறினார்.

விருதுநகர் நகராட்சிக் கூட்டம் கார்த்திகா தலைமையில் செவ்வாய்க்கிழ்மை நடைபெற்றது. துணைத் தலைவர் காசிராஜன், ஆணையாளர் ஜான்சன், நகரமைப்பு அதிகாரி மாலதி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டுத் தெரிவித்து, இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறப்பட்டது.

கூட்ட விவாதம் வருமாறு:

உறுப்பினர் ஜெயக்குமார்: நகரில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் விதத்தில், தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்றாதது கண்டனத்துக்குரியது. துப்புரவுப் பணியை மேற்கொள்ள, தனியாருக்கு ஒப்பந்தம் அளித்தது சரியல்ல.

உறுப்பினர்கள் ஆண்டவர், ஆரிப் அலி, மாரியப்பன்: விருதுநகரில் பழுதடைந்த ஆழ்குழாய்கள் விசைப்பம்புகளை சீர்படுத்தத் தேவையான உதிரிப் பாகங்கள் இல்லை. அதனால் ஆழ்குழாய்களைப் பழுது நீக்க, ஒப்பநதக்காரர்கள் முன்வராவிட்டால், நகராட்சி ஊழியர்களைக் கொண்டு சரிசெய்ய வேண்டும்.

தலைவர் கார்த்திகா: விருதுநகர் நகராட்சிககுத் தேவையான உதிரிப் பாகங்கள் வாங்க பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கார்த்திகேயன்: குப்பைகள் அள்ளுவதற்காகத் தரப்பட்ட வாகனங்களை, பழுதடைந்த நிலையில் நகராட்சியிடம் ஒப்படைத்தது குறித்து நகராட்சி எடுத்த நடவடிக்கை என்ன இதுகுறித்து பலமுறை சுட்டிக் காட்டியும் நடவடிக்கை இல்லை.

(அப்போது தனது பேச்சை விரைவில் முடிக்கும்படி, நகராட்சித் தலைவர் கார்த்திகா கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார் கார்த்திகேயன்.)

தலைவர் கார்த்திகா: விருதுநகரில் சுகாதாரப் பிரச்னை, அடிகுழாய்களைப் பழுது பார்த்தல் உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்க முடியாததற்குக் காரணம், நிதிப் பற்றாக்குறைதான். அரசு அளிக்கும் உபரித் தொகையும், நகராட்சி கடன் தவணைக்காக பிடித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மாதம்தோறும் நகராட்சி ஊழியர்கள் ஊதியத்துக்காக கூடுதலாக ரூ.12 லட்சம் வழங்க நேரிடுகிறது. அதனால் நிதிப் பற்றாக்குறை தவிர்க்க இயலாதது.

உறுப்பினர் சுகுமார் ராஜன்: நகராட்சி வருவாயைப் பெருக்க எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? விருதுநகரில் வரி வசூலை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.