Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அமைச்சர் ஏ.கே.வாலியா தகவல் நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் மாநகராட்சிக்கு ஸி 1,500 கோடி உதவி

Print PDF

தினகரன் 28.07.2010

அமைச்சர் ஏ.கே.வாலியா தகவல் நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் மாநகராட்சிக்கு ஸி 1,500 கோடி உதவி

புதுடெல்லி, ஜூலை 28: நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஸி 1,500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ஏ.கே.வாலியா தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும், 6வது சம்பளக் கமிஷன் படி, நிலுவைத் தொகையை ஊழியர்களுக்கு வழங்க முடியாமலும் நிர்வாகம் திணறி வருகிறது. மேலும், மாநகராட்சிக்காக பணிகளை முடித்த கான்டிராக்டர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிலுவைத் தொகையை மாநகராட்சி வழங்கவில்லை. பணம் வராமல் பணிகளை செய்ய முடியாது என்று கான்டிராக்டர்களும் அறிவித்து விட்டனர். இதனால் மாநில அரசிடம் இருந்து நிதியுதவியை பெறுவது என்று மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, மேயர் பிருத்வி ராஜ் சகானி தலைமையிலான மாநகராட்சி குழுவினர் நேற்று முன்தினம் மாநில நிதியமைச்சர் ஏ.கே.வாலியாவை சந்தித்து பேசினர். அமைச்சரைச் சந்தித்த குழுவில் நிலைக்குழு தலைவர் யோகேந்திர சந்தோலியா, அவை முன்னவர் சுபாஷ் ஆர்யா, மாநகராட்சி ஆணையாளர் கே.எஸ்.மெஹ்ரா மற்றும் அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பிறகு, .கே.வாலியா கூறியதாவது: ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்காகவும், இதர வகை செலவினங்களுக்காகவும் மாநகராட்சிக்கு அரசு

ஸி1,500 கோடி நிதியுதவியை வழங்க முடிவு செய்துள்ளது. இதில், ஸி1,000 கோடி மாநில அரசின் நிதியுதவியாக வழங்கப்படும். இதில், ஸி900 கோடி மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகளுக்கானது. எஞ்சிய ஸி 100 கோடி மாநகரா ட்சியின் கல்வி மற்றும் சுகாதார திட்டங்களுக்கானது. ஸி500 கோடி மாநகராட்சிக்கு கடனாக வழங்கப்படும். இந்த தொகையை 3 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும் என்றார்.