Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் ரூ.4.50 கோடி குடிநீர் கட்டணம் நிலுவை வசூலிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

Print PDF

தினகரன் 06.08.2010

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் ரூ.4.50 கோடி குடிநீர் கட்டணம் நிலுவை வசூலிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

உடுமலை, ஆக. 6: உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் ரூ.4.50 கோடி குடிநீர் கட்டணத்தை நிலுவையில் வைத்துள்ளன. அந்த தொகையை வசூலிக்க முடியாமல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் உடு மலை, மடத்துக்குளம் தாலுகா வில் பல கூட்டு குடிநீர் திட்டங்களை தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் நிறைவேற்றி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்கிறது. உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சி, மடத்துக்குளம் ஒன்றியத்தில் 11 ஊரா ட்சி மற்றும் மடத்துக்குளம், தளி பேரூராட்சிகள் இத்திட்டங்களால் பயன்பெறுகின்றன. முறையாக குடிநீர் வினியோகிக்கப்பட்டும் இந்த இரு தாலுகாக்களில் இருந்தும் தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்துக்கு குடி நீர் கட்டண நிலுவை ரூ.4.50 கோடி என்ற அளவில் உள்ளது.

இதுகுறித்து குடிநீர் வடி கால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் 145 கிராமம் பயன்பெறுகிறது. இங்கு மட்டும் ரூ.75லட்சம் குடிநீர் கட்டணம் நிலுவையில் உள்ளது. அதே போல் பூலாங்கிணர் கூட்டு குடிநீர் திட்டத்தில் 39 கிராமம் பயன்பெறுகிறது. இங்கு ரூ.22 லட்சம் கட்டணம் நிலுவையில் உள்ளது. மானுப்பட்டி&ஜோதிபாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 24 கிராமங்கள் குடிநீர் பெறுகின்றன. இங்கு ரூ.18லட்சம் நிலுவை உள்ளது. மடத்துக்குளம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 22 கிராமங்கள், மடத்துக்குளம் பேரூராட்சி பகுதி அடங்கி உள்ளன. இந்த நிர்வாகம் ரூ.38லட்சம் நிலுவை வைத்துள்ளது. தாமரைப்பாடி கூட்டு குடிநீர் திட்டத்தில் 26 கிராமங்கள் உள்ளன. இங்கு ரூ.20 லட்சம் பாக்கி உள்ளது. ஆயிரம் லிட்டர் குடிநீரை சுத்திகரித்து பொதுமக்களுக்கு வினியோகிக்க குடிநீர் வடிகால் வாரியம் ரூ.14 வரை செலவு செய்கிறது. ஆனால் அதில் ரூ.3 மட்டுமே வாரியத்துக்கு கிடைக்கிறது. மற்ற தொகை கிடைப்பதில்லை. பொதுமக்களிடம் இருந்து குடிநீர் கட்டணத்தை உள்ளாட்சி நிர்வாகங்கள் முறை யாக வசூல் செய்கின்றன. ஆனால் அதை குடிநீர் வடி கால் வாரியத்துக்கு திருப்பி செலுத்துவதில்லை.

இந்த நிலுவைத் தொகையை வசூலிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறி யாளர் மற்றும் அதிகாரிகள் நேர டியாக களம் இறங்கி உள்ளனர். ஆனால் பணம் வசூலாவதில்லை. குடிநீர் வினியோகிக்க தேவையாகும் மின்கட்டணத் தை குடிநீர்வடிகால் வாரியம் தவறாமல் செலுத்தி வருகிறது. குடிநீரை சுத்தப்படுத்த உதவும் ரசாயன பொருள், குழாய் பராமரிப்பு போன்றவற்றையும் பார்த்துக் கொள்கிறது.

உள்ளாட்சி நிர்வாகங்கள் குடிநீர் கட்டணத்தை திருப்பி செலுத்தாததால் குடிநீர் வடிகால் வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது, இதை ஊராட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்வதில்லை என வேதனையுடன் அதிகாரிகள் தெரிவித்தனர்.