Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ1.46 கோடியை 6 மாதங்களாக பயன்படுத்தாத கடலூர் நகராட்சி

Print PDF

தினமணி 24.08.2010

ரூ1.46 கோடியை 6 மாதங்களாக பயன்படுத்தாத கடலூர் நகராட்சி

கடலூர் ஆக. 23: கடலூரில் மீன் அங்காடிகள் கட்ட மத்திய அரசு வழங்கிய |ரூ 1.46 கோடியை, நகராட்சி பயன்படுத்தாததால், நகர மக்கள் சுகாதாரமற்ற மீன் அங்காடிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

÷"கடலூர் நகரில் மீனங்காடிகள் மிகவும் சுகாதாரக் கேடான நிலையில் உள்ளன. இவற்றை மேம்படுத்த வேண்டும்' என்று தமிழ்நாடு மீனவர் பேரவை மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. இக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 6 மாதங்களுக்கு முன் ரூ| 1.46 கோடி ஒதுக்கியது.

÷இதில் இருந்து கடலூர் திருப்பாப்புலியூர் பான்பரி மார்க்கெட் மீன் அங்காடிக்கு | ரூ82 லட்சம், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் மீன் அங்காடிக்கு ரூ| 24 லட்சம், தேவனாம்பட்டினம் மீன் அங்காடிக்கு | ரூ40 லட்சம் ஒதுக்கப்பட்டது.

÷மீன் அங்காடிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற வரைபடங்களும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் 50 சதவீத நிதி, ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு கடலூரில் உள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாகவும், மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

÷இந்நிலையில் கடலூர் பான்பரி மார்க்கெட்டில் |ரூ 15 லட்சத்தில் மீன் அங்காடி ஒன்று கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் உள்ளது. 30 வியாபாரிகள் பயன்படுத்தும் வகையில், நகராட்சியால் இந்த அங்காடி கட்டப்பட்டது. ஆனால் 60-க்கும் மேற்பட்ட மீன் வியாபாரிகள் இங்கு இருப்பதால், இதில் யாருக்கு இடம் அளிப்பது என்ற பிரச்னை எழுந்தது. பிரச்னையை நகராட்சி தீர்த்து வைக்க முன் வராததால் |ரூ 15 லட்சம் செலவிட்டும் பயனில்லை.

÷இதனால் பான்பரி மார்க்கெட் மீன் அங்காடி கூரைக் கொட்டகையில், முற்றிலும் சுகாதாரக் கேடான நிலையில் இயங்கி வருகிறது. இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகளோ, நகராட்சி நிர்வாகமோ கவலைப்படவில்லை. மக்களும் மெüனம் சாதிக்கிறார்கள்.

÷இந்நிலையில் 3 நாள்களாப் பெய்துவரும் அடை மழையால், பான்பரி மார்க்கெட் மீன் அங்காடி கூரைக் கொட்டகை திங்கள்கிழமை மிகவும் ஒழுகத் தொடங்கியது. ஆத்திரம் அடைந்த மீன் விற்கும் பெண்கள், மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் சுப்புராயன் தலைமையில், நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டனர்.

÷இதுகுறித்து நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறுகையில், நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட முயற்சியால், மத்திய அரசின் மீனவர்நல நிதியிலிருந்து, ரூ| 1.46 கோடி பெறப்பட்டு உள்ளது. திட்டத்துக்கான பணம் கிடைத்து விட்டது. நகராட்சிகளின் இயக்குநர் அலுவலகம் இறுதி ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது. செப்டம்பர் 4-ம் தேதி வரச்சொல்லி இருக்கிறார்கள். எனவே செப்டம்பர் இறுதிக்குள் மீன் அங்காடிகளுக்கு டெண்டர் விடப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.