Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பயணிகள் நிழற்குடை ரூ2 கோடி வருவாய்

Print PDF

தினகரன் 18.10.2010

பயணிகள் நிழற்குடை ரூ2 கோடி வருவாய்

கோவை, அக்.18:கோவையில் புதிய நிழற்குடையால் 2 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா கூறியதாவது;

கோவை மாநகரில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு நகர்ப்பகுதியில் 259 பஸ் ஸ்டாப் நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தனியார், பொதுமக்கள் பங்களிப்புடன் புதிய வடிவமைப்பில் நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்ட சில இடத்தில் நிழற்குடை சரியாக இல்லை என தெரிவிக்கப்பட்டது. வெயில் பாதிப்பு தொடர்பாக எவ்வித புகாரும் வர வில்லை. ஆனால் மழை நீர் வருவதாக புகார் வந்தது. இந்த நிழற்குடைகளில் மழை நீர் தடுப்பு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார், பொதுமக்கள் பங்களிப்புடன் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் நிழற்குடை அமைக்கும் பணி முடியவில்லை. விரைவில் பணி முடிந்து விடும். நிழற்குடை அமைக்கும் பணிக்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த செலவும் செய்யவில்லை. தனியார் நிறுவனங்கள், தங்கள் விளம்பரங்களை குறிப்பிட்ட அளவிற்கு வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உரிய விதிமுறைப்படி தான் இந்த விளம்பரம் வைக்க அனுமதி தரப்பட்டிருக்கிறது. நிழற்குடை வடிவமைப்பை மாற்ற மாநகராட்சி நிர்வாகம் எந்த செலவும் செய்யவேண்டியதில்லை. நிழற்குடை அமைப்பதன் மூலமாக மாநகராட்சிக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆண்டிற்கு 2 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். அவிநாசி, திருச்சி ரோட்டில் செம்மொழி மாநாட்டின் போது அமைக்கப்பட்ட மின் விளக்குகள் சிறப்பாக இருக்கிறது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது. நடைபாதை அமைக்கப்பட்ட பகுதியில் சுமார் 10 மீட்டர் இடைவெளியில் விளம்பரம் வைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அன்சுல்மிஸ்ரா கூறினார்.