Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

ராஜாஜி பூங்கா முருகன் கோயிலில் ரூ.1 லட்சம் உண்டியல் வசூல்

Print PDF

தினமணி 17.06.2010

ராஜாஜி பூங்கா முருகன் கோயிலில் ரூ.1 லட்சம் உண்டியல் வசூல்

மதுரை, ஜூன் 16: மதுரை மாநகராட்சி ராஜாஜி சிறுவர் பூங்காவில் உள்ள அருள்மிகு தண்டபாணி திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தலைமையிலும், தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல் முன்னிலையிலும் நடைபெற்ற இப்பணியில், மாநகராட்சி திரு.வி..பள்ளியின் நாட்டு நலப்பணி மாணவர்கள் ஈடுபட்டனர்.

எண்ணிக்கையின் முடிவில் காணிக்கையாக பக்தர்கள் ரூ.1,02,371 அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து கமிஷனர் கூறுகையில், இந்தத் தொகை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் கோயில் நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது; இக்கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், ஏனைய பராமரிப்புச் செலவுக்கும் பயன்படுத்தப்படும் என்றார்.

 

தானே மாநகராட்சி முடிவு தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.15 லட்சம் இன்சூரன்ஸ்

Print PDF

தினகரன் 16.06.2010

தானே மாநகராட்சி முடிவு தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.15 லட்சம் இன்சூரன்ஸ்

தானே, ஜூன்16: தீய ணைப்பு படை வீரர் களுக்கு செய்யப்பட்டுள்ள காப்பீட்டு தொகையை ரூ.15 லட்சமாக உயர்த்த தானே மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தீயணைப்பு படை வீரர்கள் பெயரில் தற் போது ரூ.2 லட்சத்துக்கு மட்டுமே இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. பணியின் போது அவர் கள் இறக்க நேரிட்டால் ரூ. 2 லட்சம் இன்சூரன்ஸ் பணம்தான் கிடைக்கும்.

இதற்கிடையே கடந்த ஆண்டு தானேயில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத் தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 6 தீயணைப்பு படை வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு வீரர்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், இன்சூரன்ஸ் தொகையை ரூ.15 லட்சமாக அதிகரிக்க தானே மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நாளை மறுநாள் நடக்கும் மாநகராட்சி பொதுக்குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதன் மூலம் தானே மாநகராட்சியின் 5 தீயணைப்பு நிலையங் களில் பணி புரியும் 273 ஊழியர்கள் பயனடை வார்கள்.

 

140 பேரூராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.6.25 கோடி நிதி

Print PDF

தினகரன் 15.06.2010

140 பேரூராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.6.25 கோடி நிதி

சிவகங்கை, ஜூன் 15: தமிழகத்தில் 140 பேரூராட்சிகளில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.6.25 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 561 பேரூராட்சிகளிலும் 2007&08 முதல் 2010&11 வரையிலான 4 ஆண்டுகளில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 கோடி செலவு செய்யப்பட்டு வருகின்றது.

அரசு மானியமாக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2010&11ம் ஆண்டில் மீதமுள்ள 141 பேரூராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சியில் மட்டும் நில தீர்வு செய்ய முடியாததால் அங்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற 140 பேரூராட்சிகளில் நடப்பாண்டில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான அரசு மானியத் தொகை ரூ.25 கோடியில் முதல் கால் ஆண்டிற்கான தவணை தொகை ரூ.6.25 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது. நகராட்சி நிர்வாக செயலர் நிரஞ்சன்மார்டி இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

 


Page 22 of 37