Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

எப்.எஸ்.ஐ. உயர்வு ரத்து ஐகோர்ட் உத்தரவால் மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு

Print PDF

தினகரன் 14.06.2010

எப்.எஸ்.. உயர்வு ரத்து ஐகோர்ட் உத்தரவால் மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு

மும்பை, ஜூன் 14: மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு ஒன்றி னால் மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டி ருக்கிறது.

புறநகர் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுவதற் கான எப்.எஸ்.. அளவை 1ல் இருந்து 1.33 ஆக அதிகரித்து மாநில அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித் தது. இந்த அதிகரிப்பை பெறுவதற்காக பில்டர்கள் மாநகராட்சிக்கும் மாநில அரசுக்கும் பிரிமியம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக 326 கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி கோரி பில்டர்களி டமிருந்து மாநகராட்சிக்கு விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் இதுவரை 182 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சிக்கு பில்டர்களிடமிருந்து பிரிமியத் தொகையாக ரூ.348 கோடி வருமானம் கிடைத்து இருக்கிறது. இந்த ஆண்டிலும் இதன் மூலமாக மேலும் ரூ.600 கோடி கிடைக்கும் என்று மாநக ராட்சி எதிர் பார்த்தது. இந்த பணத்தைக் கொண்டு பல்வேறு கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றவும் திட்டமிட்டு இருந்தது.

ஆனால் இப்பிரச்னை தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்றம், எப்.எஸ்.. அளவை அதி கரித்து மாநில அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கடந்த வியாழக் கிழமை உத்தரவிட்டது.

இதன் காரணமாக மாநகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதுடன் பில்டர்களி டமிருந்து ஏற்கனவே பெற்ற பிரிமிய தொகையையும் திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

புதிய கட்டிடங்களில் உள்ள மாடிப்படிகள், லிஃப்ட் மற்றும் வராண்டா ஆகியவற்றுக்கு எப்.எஸ்.. கிடையாது. எனவே மாநக ராட்சி இந்த பகுதிகளுக்கு பில்டர்களிடம் இருந்து பிரிமியம் வசூலித்து வந்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இதிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அதிகா ரிகள் கருதுகின்றனர்.

இந்த நிதி இழப்புகளை சரி செய்யும் பொருட்டு, பழைய உத்தரவில் சில திருத்தங்களை செய்து புதிதாக ஒரு உத்தரவை பிறப்பிப்பது பற்றி மாநக ராட்சியும் மாநில நகர்ப்புற மேம்பாட்டு இலாகாவும் பரிசீலித்து வருகின்றன.

இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகை யில், "வழக்கு விசாரணை யின்போது தெரிந்து கொண்ட சில ஓட்டைகளை அடைத்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட முடியும் என நம்புகிறோம்Ó என்றார்.

புதிய அறிவிப்பை வெளியிடுவதில் உள்ள சட்ட நுணுக்கங்கள் மற்றும் வேறு ஏதேனும் வழிமுறை கள் உள்ளனவா என்பது பற்றி நாளை மாநகராட்சியில் நடைபெற உள்ள கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

 

மாநில அரசு ஒப்புதல் மாநகராட்சிக்கு ரூ.271 கோடி நிதி

Print PDF

தினகரன் 09.06.2010

மாநில அரசு ஒப்புதல் மாநகராட்சிக்கு ரூ.271 கோடி நிதி

புதுடெல்லி, ஜூன் 9: மாநகராட்சியின் செயல்பாட்டுக்காக மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மதிய உணவு திட்டம், கல்வி, சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு பணிகள் ஆகியவற்றுக்காக ரூ.271 கோடி ஒதுக்கீடு செய்ய அரசு ஒப்புதல் அளி த்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாநில நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஏ.கே.வாலியா கூறியதாவது:

மாநகராட்சிக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ.271 கோடி நிதியில் நகர்ப்புற மேம்பாட்டுக்காக ரூ.138 கோடியும், சாலைகள் மேம்பாட்டு பணிக்கு ரூ.36.75 கோடியும், கல்வி மற்றும் மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.96 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு நடப்பு நிதியாண்டில் மொத்தம் ரூ.912 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது ஒதுக்கப்பட்டுள்ளது முதல்கட்ட நிதி. மக்களுடன் தொடர்புடைய திட்டங்களில் எந்த நிதி குறைப்பும் இல்லை. மாநகராட்சி இந்த நிதியை முறையாக பயன்படுத்தி, திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றும் என்று நம்புகிறோம். இவ்வாறு அமைச்சர்

 

விருதுநகரில் நீடிக்கும் பிரச்னைகள்: நகராட்சிக்கு நிதிப் பற்றாக்குறை

Print PDF

தினமணி 02.06.2010

விருதுநகரில் நீடிக்கும் பிரச்னைகள்: நகராட்சிக்கு நிதிப் பற்றாக்குறை

விருதுநகர், ஜூன் 1: விருதுநகரில் குடிநீóர், சுகாதாரப் பிரச்னைக்கு முழுமையாகத் தீர்வு காண இயலாததற்கு, நிதி பற்றாக்குறையே காரணம் என்று நகராட்சித் தலைவர் கார்த்திகா கூறினார்.

விருதுநகர் நகராட்சிக் கூட்டம் கார்த்திகா தலைமையில் செவ்வாய்க்கிழ்மை நடைபெற்றது. துணைத் தலைவர் காசிராஜன், ஆணையாளர் ஜான்சன், நகரமைப்பு அதிகாரி மாலதி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டுத் தெரிவித்து, இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறப்பட்டது.

கூட்ட விவாதம் வருமாறு:

உறுப்பினர் ஜெயக்குமார்: நகரில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் விதத்தில், தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்றாதது கண்டனத்துக்குரியது. துப்புரவுப் பணியை மேற்கொள்ள, தனியாருக்கு ஒப்பந்தம் அளித்தது சரியல்ல.

உறுப்பினர்கள் ஆண்டவர், ஆரிப் அலி, மாரியப்பன்: விருதுநகரில் பழுதடைந்த ஆழ்குழாய்கள் விசைப்பம்புகளை சீர்படுத்தத் தேவையான உதிரிப் பாகங்கள் இல்லை. அதனால் ஆழ்குழாய்களைப் பழுது நீக்க, ஒப்பநதக்காரர்கள் முன்வராவிட்டால், நகராட்சி ஊழியர்களைக் கொண்டு சரிசெய்ய வேண்டும்.

தலைவர் கார்த்திகா: விருதுநகர் நகராட்சிககுத் தேவையான உதிரிப் பாகங்கள் வாங்க பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கார்த்திகேயன்: குப்பைகள் அள்ளுவதற்காகத் தரப்பட்ட வாகனங்களை, பழுதடைந்த நிலையில் நகராட்சியிடம் ஒப்படைத்தது குறித்து நகராட்சி எடுத்த நடவடிக்கை என்ன இதுகுறித்து பலமுறை சுட்டிக் காட்டியும் நடவடிக்கை இல்லை.

(அப்போது தனது பேச்சை விரைவில் முடிக்கும்படி, நகராட்சித் தலைவர் கார்த்திகா கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார் கார்த்திகேயன்.)

தலைவர் கார்த்திகா: விருதுநகரில் சுகாதாரப் பிரச்னை, அடிகுழாய்களைப் பழுது பார்த்தல் உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்க முடியாததற்குக் காரணம், நிதிப் பற்றாக்குறைதான். அரசு அளிக்கும் உபரித் தொகையும், நகராட்சி கடன் தவணைக்காக பிடித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மாதம்தோறும் நகராட்சி ஊழியர்கள் ஊதியத்துக்காக கூடுதலாக ரூ.12 லட்சம் வழங்க நேரிடுகிறது. அதனால் நிதிப் பற்றாக்குறை தவிர்க்க இயலாதது.

உறுப்பினர் சுகுமார் ராஜன்: நகராட்சி வருவாயைப் பெருக்க எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? விருதுநகரில் வரி வசூலை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 23 of 37