Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

8 மாநகராட்சியில் குடிநீர் கட்டண நிலுவை மீதான வட்டி ரூ.200 கோடி தள்ளுபடி

Print PDF

தினகரன்   26.05.2010

8 மாநகராட்சியில் குடிநீர் கட்டண நிலுவை மீதான வட்டி ரூ.200 கோடி தள்ளுபடி

பெங்களூர், மே 26: பெங்களூரை தவிர மாநிலத்தின் இதர மாநகராட்சியில் செலுத்தப்படாமல் இருக்கும் குடிநீர் கட்டணத்தின் மீதான வட்டி ரூ.200 கோடியை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூர் மாநக ராட்சியை தவிர மாநிலத்தில் உள்ள மைசூர், பெல்லாரி, தாவணகெரெ, மங்களூர், தும்கூர், ஹூப்ளி &தார்வார், பெல்காம், குல்பர்கா மாநகராட்சியில், இதுவரை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணத்தின் மீதான வட்டி ரூ.200 கோடியை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் நகரங்களில் சட்டவிரோத குடிநீர் இணைப்பை ஒழுங்குபடுத்தும் வகையில், மீட்டர்களை பொருத்தவும் முடிவு செய்துள்ளது.

விவசாய கடன் வட்டி தள்ளுபடி போன்று, குடிநீர் நுகர்வோர் தங்கள் கட்டணத்தின் பிரதான நிதியை மட்டும் கட்டினால் போதும். சிம்பிள் மற்றும் காம்பவுண்டு வட்டிகளை மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது.

பிரதான நகரங்களில் குடிநீர் வினியோகம் பராம ரிப்பை, சுவிட்சர்லாந்து நிறுவனத்திடம் ஒப் படைக்க அரசு திட்டமிட் டுள்ளது. இதற்கு வசதியாக குடிநீர் மீட்டர்களை பொருத்தவுள்ளது. மேலும் ரூ.300 கோடி வருவாயை நுகர்வோரிடமிருந்து பெறுவதற்காக ரூ.200 கோடி வட்டியை தள்ளுபடி செய்ய நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

நிலத்தடி குடிநீர் வினி யோக முறையும் தனியாருக்கு ஒப்படைக்கப் பட்டு விட்டால், மாநகராட்சிக்கும் குடிநீர் வினியோக திட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இருக் காது என்பது குறிப்பிடத் தக்கது

 

சத்திரம் நகராட்சிக்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமலர்    12.05.2010

சத்திரம் நகராட்சிக்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு

ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் நகராட்சிக்கு எம்.எல்.., தொகுதி மேம்பாட்டு நிதி 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வீரப்பன்சத்திரம் நகராட்சி தலைவர் மல்லிகா கூறியதாவது: குப்பை பிரச்னையை தீர்க்க காவிரிக்கரையில் இருந்து சற்று தள்ளி எட்டு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ப்பை கொட்டி உரம் தயாரிக்கப்படும். ஆரம்பக்கட்ட பணி 28 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. உரம் தயாரிப்பு பணிக்கு 78 லட்சம் ரூபாய் செலவாகும். இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடைந்துவிடும். நகராட்சி குப்பை பிரச்னைக்கும் விடிவு வந்துவிடும்.

உரக்கிடங்கு செல்வதற்கு நகராட்சி சார்பில் தனிப்பாதை அமைக்கும் பணி 45 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. அங்குள்ள கழிவுநீர் ஓடைக்கு மேல் சிறு பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அதன் பிறகு இந்த வழியாக குப்பை லாரிகள் உரக்கிடங்குக்கு செல்ல முடியும். ஈரோடு எம்.எல்.., ராஜா தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதில் 10 லட்சம் ரூபாய் செலவில் 16வது வார்டில் சமுதாயக்கூடமும், மீதமுள்ள 15 லட்சம் ரூபாயில் மழைநீர் வடிகால் கட்டும் பணியும் நடந்து வருகிறது. குமலன்குட்டையில் நான்கு லட்சம் ரூபாய் செலவில் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது. நகராட்சியில் 17 ஆயிரத்து 981 பேருக்கு அரசின் இலவச கலர் 'டிவி' வழங்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 500 பேருக்கு மேல் காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2,440 பேருக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு வாடகையை உயர்த்த முடிவு

Print PDF

தினமலர்     12.05.2010

காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு வாடகையை உயர்த்த முடிவு

திருவையாறு: திருவையாறு பேரூராட்சி காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு வாடகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.திருவையாறு பேரூராட்சி காய்கறி மார்க்கெட் கடைகளுக்கான வாடகையை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவையாறில் நடந்தது.பேரூராட்சித் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மனோகரன், கவுன்சிலர்கள் குமணன், முருகானந்தம், காந்தி, ஜெயராமன், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சாமிநாதன், கண்ணன், சங்கர், சவுரிராஜன், திவ்யநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளுக்கும் வாடகை உயர்த்துவது பற்றி வியாபாரிகளு டனும் ஆலோசிக்கப்பட்டது. தினசரி கடைகளுக்கு 50 காசுவீதம் உயர்த்துவது என்றும், இந்த வாடகை உயர்வை கடந்த 1ம்தேதி முதல் அமல்படுத்துவது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 24 of 37