Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

அரசு வழங்குமா ரூ.50 லட்சம்? கருமத்தம்பட்டி பேரூராட்சி எதிர்பார்ப்பு

Print PDF

தினமலர் 26.04.2010

அரசு வழங்குமா ரூ.50 லட்சம்? கருமத்தம்பட்டி பேரூராட்சி எதிர்பார்ப்பு

சோமனூர் : உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடர்பான வளர்ச்சிப் பணிகளால் கருமத்தம்பட்டி பேரூராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய 50 லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஜூன் மாதம் கோவையில் நடக்கிறது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய ரோடுகள் போடும் பணி, அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூர், கருமத்தம்பட்டி பகுதிகளில் மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இது தவிர, சோமனூர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணியும் தற்போது துவங்கி நடந்து வருகிறது. இதற்காக இரண்டு மாற்று வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்காக ரோட்டோரம் தோண்டப்பட்ட குழிகளால், கருமத்தம்பட்டி நால் ரோடு, சோமனூர் மெயின் ரோடு, பவர் ஹவுஸ் ரோடு, சந்தைபேட்டை, மில் ரோடு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துப் பகுதிகளிலும் சாக்கடை கால்வாய்கள் உடைக்கப்பட்டுள்ளன. அத்திக்கடவு குடிநீர் திட்ட பிரதான குழாய்கள், வினியோக குழாய்கள், போர்வெல்கள், வினியோக குழாய்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன. ஏராளமான தெரு விளக்குகள் அப்புறப்படுத்தப்பட்டு, இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணியில் ஏராளமான விளக்குகள் மற்றும் உபகரணங்கள் சேதமடைந்து, மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம் கூறியதாவது: ரோடு பணிகள் முறையாக திட்டமிட்டு செயல்படுத்தாததால் பொதுமக்களுக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடி நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குடிநீர் வினியோகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இடிக்கப்பட்ட சாக்கடை கால்வாய், சேதமடைந்த குழாய்கள், தெரு விளக்குகள் உள்ளிட்டவற்றை சீரமமைக்க 50 லட்சம் ரூபாய் செலவாகும். இந்த பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு, மகாலிங்கம் தெரிவித்தார்.

Last Updated on Monday, 26 April 2010 06:18
 

மாநகராட்சி பணியாளருக்கு நிலுவைத்தொகை வழங்கல்

Print PDF

தினமலர் 15.04.2010

மாநகராட்சி பணியாளருக்கு நிலுவைத்தொகை வழங்கல்

திருச்சி: திருச்சி மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆறாவது சம்பள கமிஷன் நிலுவைத் தொகையின் இரண்டாவது தவணைத் தொகை 2.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் பால்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆறாவது சம்பள கமிஷன் நிலுவைத் தொகையின் இரண்டாவது தவணைத் தொகையை ஏப்ரல் மாத ஊதியத்துடன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, திருச்சி மாநகராட்சியில் பணியாற்றும், இரண்டாயிரத்து 657 அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு இரண்டு கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து 588 ரூபாயும், ஆயிரத்து 326 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 31 லட்சத்து ஏழாயிரத்து 976 ரூபாய் என மூன்றாயிரத்து 983 பேருக்கு, மொத்தம் 2.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 15 April 2010 09:12
 

மாநகராட்சிப் பணியாளர்களுக்கு 6-வது ஊதியக் குழு நிலுவைத் தொகை அளிப்பு

Print PDF

தினமணி 13.04.2010

மாநகராட்சிப் பணியாளர்களுக்கு 6-வது ஊதியக் குழு நிலுவைத் தொகை அளிப்பு

திருச்சி, ஏப். 12: திருச்சி மாநகராட்சிப் பணியாளர்களுக்கு 6-வது ஊதியக் குழுவின் நிலுவைத் தொகையின் 2-வது தவணை ரூ. 2.70 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தெரிவித்தார்.

இந்தத் தவணையை ஏப்ரல் மாத ஊதியத்துடன் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் ரொக்கமாக இந்தத் தொகை வழங்கப்பட்டது.

மாநகராட்சியில் பணிபுரியும் 26,578 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ. 2.37 கோடியும், 1,326 ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ. 31.07 லட்சமும் அளிக்கப்பட்டது' என்றார் அவர்.

Last Updated on Tuesday, 13 April 2010 09:54
 


Page 26 of 37