Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

பஸ் நுழைவுக் கட்டண வசூல் உரிமம் ஏலம்

Print PDF

தினமணி 30.03.2010

பஸ் நுழைவுக் கட்டண வசூல் உரிமம் ஏலம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 29: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரூராட்சி பகுதிக்கு வரும் பஸ்களுக்கு 2010-2011-க்கான நுழைவு வரிக் கட்டணம் வசூல் செய்யும் உரிமம் ஏலம், பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஐந்திற்கும் மேற்பட்டோர் பணம் கட்டி ஏலத்தில் கலந்து கொண்டனர்.

அதிகப்படியான ரூ.11 லட்சத்து 72,500-க்கு ஏலம் கேட்ட முத்துகண்ணன் என்பவருக்கு உரிமம் வழங்கப்பட்டதாக, பேரூராட்சியின் செயல் அலுவலர் மா.ஜெயக்கொடி தெரிவித்தார். மேலும் பஸ் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூ.8 மட்டுமே கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்றும் அதிக கட்டணம் வசூல் செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார்

Last Updated on Tuesday, 30 March 2010 11:25
 

ரூ. 8 லட்சத்துக்கு வாரச்சந்தை ஏலம்

Print PDF

தினமலர் 29.03.2010

ரூ. 8 லட்சத்துக்கு வாரச்சந்தை ஏலம்

வெள்ளகோவில்: வெள்ளகோவில் வாரச்சந்தை எட்டு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை, புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ் நுழைவு கட்டணம் வசூலித்தன் ஆகிய இனங்களுக்கான ஏலம் நகராட்சி கூட்ட அரங்கில நேற்று நடந்தது. செயல் அலுவலர் சோமசுந்தரம், தலைமை எழுத்தர் ராஜா முன்னிலை வகித்தனர். வாரச்சந்தை 8.10 லட்சம் ரூபாய்க்கும், பஸ் ஸ்டாண்ட்டு 6.25 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது.

Last Updated on Monday, 29 March 2010 06:19
 

மடத்துக்குளம் பேரூராட்சி சுங்கவரி வசூல் ஏலம்

Print PDF

தினமலர் 18.03.2010

மடத்துக்குளம் பேரூராட்சி சுங்கவரி வசூல் ஏலம்

மடத்துக்குளம்: மடத்துக்குளம் பேரூராட்சிக்குக்கு சொந்தமான இடத்திற்குட்பட்ட குத்தகை இனங்கள் செயல் அலுவலர் திருமலைசாமி முன்னிலையில் ஏலத்தில் விடப்பட்டது. பஸ் ஸ்டாண்டுக்குள் வரும் பஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை, வாரச் சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமை, தினசரிமார்கெட், கமிஷன் மண்டி நடத்தும் உரிமை, பேரூராட்சி எல்லையில் இறைச்சி கடைகள் நடத்தும் உரிமை, சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் அமராவதி ஆற்றில் பரிசல் விடும் உரிமை, தென்னை மரங்களின் மேல் பலனை அனுபவிக்கும் உரிமை, பேரூராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை புளிய மரங்களின் மேல் பலனை அனுபவிக்கும் உரிமை, சுகாதார வளாகங்களில் கட்டணம் வசூலிக்கும் உரிமை,தெருவிளக்கு உபகரணங்கள்,பழைய தினசரி நாளிதழ் எடைக்கு எடுத்து கொள்ளுதல் உட்பட்ட இனங்கள் ரூ.5.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

Last Updated on Thursday, 18 March 2010 06:43
 


Page 28 of 37