Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

பேரணாம்பட்டில் திட்டப்பணிகள்மண்டல இயக்குனர் பார்வை

Print PDF

தினமலர் 06.03.2010

பேரணாம்பட்டில் திட்டப்பணிகள்மண்டல இயக்குனர் பார்வை

பேரணாம்பட்டு:பேரணாம்பட்டு நகராட்சியில் ரூ.1கோடியே 3.50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மண்டல இயக்குனர் பார்வையிட்டார்.ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகராட்சி அலுவலக கட்டடம், ரூ.7. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தலைமை நீரேற்று தொட்டி, ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய ஆடு அறுக்கும் தொட்டி மற்றும் எம்.பி.,நிதியில் பஜார் வீதி மற்றும் அரசு மருத்துவமனை எதிரில் ரூ.5லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்டு வரும் ஹைமாஸ் விளக்குகள், எம்.எல்..,நிதியின் கீழ் ரூ.21லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் திட்ட பணிகளை வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். நகராட்சி தலைவர் ஆலியார் ஜூபேர் அமது, செயல் அலுவலர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் பெண்ணரசி சத்யா உட்பட நகராட்சி கவுன்சிலர்கள் உடன் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 06 March 2010 10:18
 

1.52 கோடி மதிப்பில் கட்டடங்கள் திறப்பு

Print PDF

தினமலர் 06.03.2010

1.52 கோடி மதிப்பில் கட்டடங்கள் திறப்பு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் 1.52 கோடி ரூபாய் மதிப் பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், படகு குழாம், நூலக ட்டடங்களை இன்று (6ம் தேதி) துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், 50 லட்சம் மதிப்பில் சுற்றுலா வளர்ச்சி மையத்தில் படகு குழாம், குடில்கள், உணவு விடுதி மற்றும் குழந்தைகள் பூங்கா, 20 லட்சம் மதிப்பில் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு புதிய அலவலக கட்டடம் அடிக்கல் நாட்டுதல், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் வாரசந்தை, நாளங்காடி, 4 லட் சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நூலக கட்டடம் உள் ளிட்டவைகளை காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் அமைச்சர் பன்னீர்செல் வம் தலைமையில் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.விழாவில் பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ், துணைத் தலைவர் செழியன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்கின்றனர்.

Last Updated on Saturday, 06 March 2010 09:46
 

கரூருக்கு புதை சாக்கடை அடைப்பைச் சரிசெய்யும் இயந்திரம்

Print PDF

தினமணி 06.03.2010

கரூருக்கு புதை சாக்கடை அடைப்பைச் சரிசெய்யும் இயந்திரம்

கரூர், மார்ச் 5: கரூர் நகராட்சிக்கு ரூ. 30 லட்சத்தில் புதை சாக்கடை அடைப்புகளைச் சரிசெய்யும் இயந்திரம் (படம்) வாங்கப்பட்டது.

கரூர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் புதை சாக்கடைத் திட்டம் நடைமுறையில் உள்ளது. எனவே, புதைசாக்கடையில் ஏற்படும் அடைப்புகளைச் சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய இயந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, நகராட்சியின் இடைநிரப்பு நிதி மூலமாக ரூ. 30 லட்சத்தில் இதற்கான வாகனம் அண்மையில் வாங்கப்பட்டது. இந்த வாகனத்தை நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நகராட்சித் தலைவர் பி.சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். கரூர் மக்களவை முன்னாள் உறுப்பினர் கே.சி. பழனிசாமி, திமுக மாவட்டப் பொறுப்பாளர் நன்னியூர்ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று புதிய இயந்திர வாகனத்தைத் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், நகராட்சி துணைத் தலைவர் பி. கனகராஜ், ஆணையர் (பொ) சி. ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பூவை ரமேஷ்பாபு, கவுன்சிலர்கள் வே. கதிரவன், எம். ராஜலிங்கம், . பரமேஸ்வரி, கி. வடிவேல், நகர்நல அலுவலர் கே. சந்தோஷ்குமார், திமுக இளைஞரணித் துணை அமைப்பாளர் காலனி செந்தில் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 06 March 2010 06:16
 


Page 29 of 37