Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

Print PDF

தினமணி      18.05.2010

ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

சிவகாசி,மே18: விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 4,087 பயனாளிகளுக்கு ரூ 4.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் திங்கள்கிழமை வழங்கினார். வி.வி.வி. மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்ஹசிக்கு மாவட்ட ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமை வகித்தார். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

இந்த திட்டத்தினால் ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு வகையில் பயன்அடையும் நிலை உள்ளது. கிராமபுரத்தில் உள்ளவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

இத் திட்டத்திற்கான அடிகல் நாட்டு விழா ஜூலை மாதம் நடைபெற உள்ளது. துணை முதல்வர் ஸ்டாலின் இத் திட்டத்தை துவக்கிவைத்து அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மாவட்டத்திலுள்ள 1800 கிராமங்களுக்கும் குடிநீர் வசதி கிடைக்கும்.

மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

22,086 பேருக்கு ரூ 25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மாவட்டத்தில் 9 இடங்களில் வழங்கப்பட உள்ளது.மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள 15 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், நகர்மன்றத் தலைவர் கார்த்திகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் கணேசன் வரவேற்றார்.