Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொரப்பாடி பேரூராட்சியில் ரூ.5.20 லட்சத்தில் அடிப்படை வசதிகள்

Print PDF

தினமணி     24.05.2010

தொரப்பாடி பேரூராட்சியில் ரூ.5.20 லட்சத்தில் அடிப்படை வசதிகள்

பண்ருட்டி, மே 23: தொரப்பாடி பேரூராட்சி பகுதியில் பின் தங்கிய மண்டல மானிய நிதியில் இருந்து ரூ.5.20 லட்சம் செலவில் அடிப்படை வசதிகள் செய்ய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

÷பண்ருட்டி வட்டம் தொரப்பாடி பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் அதன் தலைவர் ஜெயலட்சுமி துரைராஜ் தலைமையில், துணைத் தலைவர் யூ.வி.என்.அருணாசலம் செட்டியார் முன்னிலையில் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

÷கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

÷எஸ்.எஸ்.பி.ராஜேஸ்குமார்: நந்தகுமார் லே அவுட், ஜெயராம் நகரில் உள்ள பூங்காவுக்கு சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும்.

÷கீதா பலராமன்: செல்வபுரம் பகுதியில் குடிநீர் பைப் விஸ்தரிப்பு செய்ய வேண்டும்.

÷சரஸ்வதி முருகன்: நெரிஞ்சிப்பேட்டை தெருவில் சாலை பழுதடைந்துள்ளது. இதில் சிமெண்ட் சாலை அமைத்துத் தரவேண்டும்.

÷என்.ஆர்.பிரகாஷ்: மெயின் ரோடு தெருவில் தண்ணீர் பஞ்சம் உள்ளது. மேற்கண்ட பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும்.

÷ரமேஷ்குமார்: ஆதிதிராவிடர் புதுக்காலனியில் சாலை வசதியும், மின் விளக்கு வசதியும் செய்து தரவேண்டும்.

÷இதற்கு பதில் அளித்த தலைவர் ஜெயலட்சுமி துரைராஜ், பின்தங்கிய மண்டல மானிய நிதியில் இருந்து ரூ.5.19 லட்சம் செலவில் மேற்கண்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கூறினார்.

Last Updated on Tuesday, 25 May 2010 04:20