Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் மாநகராட்சி : மின்வெட்டை சமாளிக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமலர் 07.06.2010

சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் மாநகராட்சி : மின்வெட்டை சமாளிக்கும் பணி துவக்கம்

கோவை : கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தின் மேற்பகுதியில் சோலார் பேனல்கள் பொருத்தி ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை பேட்டரியில் தினமும் சேகரம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

கோவையில் தொடரும் மின்வெட்டை சமாளிக்க, டொமஸ்டிக் வின்ட் மில், சூரியஒளி மின்னுற்பத்தி, யு.பி.எஸ்., போன்ற மாற்று வழிகளை மக்கள் பின்பற்றத் துவங்கி விட்டனர். சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையை மாநகராட்சி நிர்வாகம் தற்போது பின்பற்றி ஆய்வு செய்யத்துவங்கியுள்ளது. இதற்காக கோவை மாநகராட்சி கட்டடத்தின் மேற்பகுதியில் 16 சோலார் பேனல்கள் பொருத்தப்பட் டுள்ளன. இதிலிருந்து பெறப்பட்டும் மின்சாரம் அதற்கென்று தனி அறையில் வைக்கப்பட்டுள்ள பேட்டரியில் சேகரம் செய்யப்படுகிறது. இதன் மூலம் தினமும் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் சேகரமாகிறது.

கோவையில் இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் என்று தொடர் மின்வெட்டின் போது மாநகராட்சி சேகரிக்கப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்து கிறது. ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தால் இருபது டியூப் லைட்டுகள், 10 மின்விசிறிகள் பயன்படுத்தலாம். இதே முறையை மாநகராட்சியிலுள்ள மற்ற துறை அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் பயன் படுத்த மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அறிவுறுத்தியுள்ளார். சோலார் பேனல்களை போல மாநகராட்சி தலைமை அலுவலகத்தின் மேற்பகுதியில் டொமஸ்டிக் வின்ட் மில் கருவிகளை (சிறிய காற்றாலை மின்உற்பத்தி) அமைக்க கமிஷனர் யோசனை தெரிவித்துள்ளார்.