Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2ம் நிலை நகராட்சியாக தரம் உயர்ந்தது காங்கயம்

Print PDF

தினகரன் 07.06.2010

2ம் நிலை நகராட்சியாக தரம் உயர்ந்தது காங்கயம்

கோவை, ஜூன் 7: திருப்பூர் மாவட்டம் காங்கயம் பேரூராட்சியை இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இடம் பெற்றிருந்த காங்கயம் தாலுகா, 2009ல் உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் வளர் ந்து வரும் நகரங்களில் ஒன்றாகவும் காங்கயம் விளங்குகிறது. இதை நகராட்சியாக தரம் உயர் த்தவேண்டும் என்று கடந்த 2007ம் ஆண்டு அக்டோபரில் காங்கயம் பே ரூராட்சியும் தீர்மானம் நிறை வேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது. இதுதொடர்பாக அரசு பரிசீலனை செய்தது. பொதுவாக ஒரு பேரூராட்சி யை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு மக்கள் தொகை மற்றும் வருமானம் உள்ளிட்ட பல் வேறு விவரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. கடந்த 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 45 ஆயிரம் மக்களையும், 22.17 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் காங்கேயம் பேரூ ராட்சி அமைந்துள்ளது. கடந்த 2008&09ம் ஆண்டின் வருமானம் ரூ.2.88 கோடி யாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது. காங்கேயம் பேரூராட்சியை இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தலாம் என பேரூரா ட்சி இயக்குநரும் பரிந்துரை செய்தது.

இதுதொடர்பாக விரி வான ஆய்வுக்கு பின்னர் காங்கேயம் பேரூராட்சியை இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த 1ம் தேதி உத்தரவு பிறப்பித்துள் ளது. இதுதொடர்பாக நகரா ட்சி குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்ட உத்தரவு:

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியடைந்து வரும் மாவட்டங்களில் ஒன்றாக திருப்பூர் அமைந்துள்ளது. மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஒன்றாக அமைந்துள்ள காங்கேயம் வளர்ந்து வரும் பகுதியாகும். இந்நக ரின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகிறது. இது தொடர்பாக பேரூராட்சி இயக்குநரின் பரிந்துரையின் பேரில் காங் கேயம் பேரூராட்சியை இரண் டாம் நிலை நகராட்சியாக ஜூன் 1ம் தேதி முதல் தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்படுகிறது. அரசிதழிலும் (கேஜட் நோட்டிபிகேசன்) வெளியிடப்படுகிறது. நகரா ட்சி நிர்வாக அமைப்புக்கான மேல் நடவடிக்கை மேற்கொ ள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் பேரூராட்சி இயக்குநர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தற்போது உடுமலை, தாராபுரம், பல்லடம், 15 வேலம்பாளையம், நல்லூர், வெள்ளகோவில் ஆகியன நகராட்சியாக உள்ளன. உடு மலை, தாராபுரம் தவிர மற்ற நான்கும் ஏற்கனவே பேரூராட்சியாக இருந்து 2005ம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டன. காங்கயம் தற்போது தரம் உயர்த்தப்பட்டதை தொ டர்ந்து நகராட்சி எண்ணிக் கை 7 ஆக அதிகரித்துள்ளது.