Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அண்ணா மறு மலர்ச்சி திட்ட பணி: 7 டவுன் பஞ்., தேர்வு

Print PDF

தினமலர் 09.06.2010

அண்ணா மறு மலர்ச்சி திட்ட பணி: 7 டவுன் பஞ்., தேர்வு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கு ஏழு டவுன் பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு டவுன் பஞ்சாயத்தும் தேர்வு செய்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தாண்டு வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நெமிலி, காந்திநகர், நாட்டறாம்பள்ளி, ஒடுக்கத்தூர், பள்ளி கொண்டா, செங்கம், போளூர் ஆகிய ஏழு டவுன் பஞ்சாயத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இரு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து டவுன் பஞ்சாயத்துக்களிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து வேலூர் மண்டல துணை இயக்குனர் (டவுன் பஞ்., )அப்துல் கலில் கூறியதாவது: இந்தாண்டு சேர்க்கப்பட்ட ஒடுக்கத்தூர் டவுன் பஞ்சாயத்தில் 11 பணிகள் செய்ய 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், காந்தி நகரில் 7 பணிகளுக்கு 56 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயும், பள்ளி கொண்டாவில் 13 பணிகளுக்கு 63 லட்ச ரூபாயும், நெமிலியில் 22 பணிகளுக்கு 61 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், நாட்டறாம்பள்ளியில் 11 பணிகளுக்கு 65 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், செங்கத்தில் 12 பணிகளுக்கு 65 லட்ச ரூபாயும், போளூரில் 14 பணிகளுக்கு 51 லட்ச ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது