Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மழைநீர் சேமிப்பு பூங்கா அடுத்த மாதம் திறப்பு

Print PDF

தினகரன் 11.06.2010

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மழைநீர் சேமிப்பு பூங்கா அடுத்த மாதம் திறப்பு

பெங்களூர், ஜூன் 11: பெங்களூரில் உருவாகி வரும் மழைநீர் சேமிப்பு பூங்காவை ஜூலையில் திறக்க பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால்வாரியம் திட்டமிட்டுள்ளது.

பெங்களூர் குடிநீர்மற்றும் வடிகால்வாரிய சட்டத்தில் திருத்தம் செய்த பிறகு, பெங்களூரில் புதிதாக கட்டப்படும் 30க்கு40 அடி, 60க்கு40 அடி பரப்புள்ள பழைய வீடுகளில் மழைநீர்சேமிப்பு கட்டமைப்புகள் கட்டாய மாக்கப்பட்டுள்ளன. இச்சட்டம் கடந்தாண்டு ஆக.27 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒருவேளை மழைநீர் சேமிப்புகட்டமைப்பை நிறுவ தவறினால் குடிநீர் மற்றும் வடிகால்குழாய் இணைப்பை துண்டிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மழைநீர் சேமிப்புசேமிப்பு கட்டமைப்புகள் பற்றி பொதுமக்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் இருப்பதால், இது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பெங்களூர் ஜெயநகரில் 48 ஆயிரம் சதுர அடியில், மழைநீர்சேமிப்பு பூங்காவை அமைக்க பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால்வாரியம் திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலுடன் கூட்டாக செயல்படுத் தப்படும் இத்திட்டத்திற்கு ரூ.2 கோடி செலவிடப்ப டுகிறது. இதில் 26 மழைநீர் சேமிப்புமாதிரிகள் பொது மக்களின் காட்சிக்குநிரந் தரமாக வைக்கப்பட்டிருக் கும். மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு குறித்து தகவல் அளிப்பதற்காக தகவல் மையமும் இங்கு அமையும். மழைநீர் சேமிப்பு தொடர்பாக ஒலி,ஒளிகாட்சியும் திரையிடப்படும். மழைநீர் சேமிப்பு தவிர, கழிவுநீர் சுத்திகரிப்புநிலையம் பற்றியும் மாதிரி வைக்கப்பட்டிருக்கும். மறுசுழற்சிமுறையில் தண்ணீரை பயன்படுத்த பொதுமக்களை ஊக்கப்படுத்துவதற்காக இது நிறுவப்படுகிறது. பூங்காவில் உள்ள அரங்கில் மழைநீர் சேமிப்பு, தண்ணீர் பாதுகாப்பு தொடர்பாக கருத்துரைகள் வழங்கப்படும். பூங்காவின் கட்டுமானப்ப ணிகள் 2009 செப்டம்பரில் துவங்கியது. 2010 ஏப்ரல் இறுதியில் முடிக்க வேண்டிய கட்டுமானப்பணிகள், ஜூலை மாதத்தில்தான் முடிவடைவதாக வாரிய அதிகாரி தெரிவித்தார். ஜூலை இறுதியில் பூங்காவை திறக்க வாரியம் திட்டமிட்டுள்ளது .