Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூடலூர் நகரில் ரூ.1.88 கோடியில் வளர்ச்சி பணிகள் நகராட்சி தலைவி தகவல்

Print PDF

தினகரன் 14.06.2010

கூடலூர் நகரில் ரூ.1.88 கோடியில் வளர்ச்சி பணிகள் நகராட்சி தலைவி தகவல்

கூடலூர், ஜூன் 14: கூடலூர் நகராட்சியில் பூங்கா, மின் மயானம், துப்புரவு பணியாளர்களுக்கான குடியிருப்பு உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1.88 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூடலூர் நகராட்சி தலைவி அன்ன புவனேஸ்வரி, செயல் அலுவலர் ரஜினி ஆகியோர் கூறியதாவது:

கூடலூர்&மைசூர் சாலை யில் புதிய நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் காலியாக உள்ள 1 ஏக்கரில் சிறுவர் பூங்கா அமைக்கப்படும். இதற் காக மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே வருவாய் துறையினர் உழவர் சந்தை அமைக்க திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் இதற்கு ஏற்ற சூழல் இல்லை என்பது கண்டுபிடிக்கபட்டதால் சிறுவர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காளம் புழா பொது மயானத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து இருப்பதால் சிறிய அளவி லான இடம் மட்டுமே காலியாக உள்ளது. இட பற்றாக்குறை யை போக்க மின் மயானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பபட்டது.

இதற்காக ரூ.45 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. வண்டிபேட்டை பகுதியில் ஏற்கன வே உள்ள துப்புரவு பணியாளர்களின் பழைய குடியிருப்புகளை மாற்றி இரண்டு அடுக்கு குடியிருப்புகள் கட்ட ரூ.48 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அனுமதிக்காகவும், நிதி ஒதுக்கீட்டிற்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் துப்புரவு பணியாளர்களுக் கான நவீன குடியிருப்புகள் அமைக்கும் பணிகள் விரை வில் துவங்கும். கூட லூர் தங்கமணி தியேட்டர் பகுதி யில் இருந்து துப்புகுட்டி பேட்டை வரையிலான நீரோடை பகுதியில் கடந்த காலங்களில் பெய்த மழை யால் பல இடங்களில் உடை ப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் நீர் புகுவது வாடிக்கையாக இருந்தது. நீரோடை கால் வாய் பகுதியை சீரமைத்து இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க ரூ.45 லட்சம் செலவில் திட்ட மதிப்பீடு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.