Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருநீர்மலை பேரூராட்சியில் ரூ.43 லட்சம் செலவில் பூங்கா, நீர் தேக்க தொட்டி அமைச்சர் திறந்தார்

Print PDF

தினகரன் 14.06.2010

திருநீர்மலை பேரூராட்சியில் ரூ.43 லட்சம் செலவில் பூங்கா, நீர் தேக்க தொட்டி அமைச்சர் திறந்தார்

தாம்பரம், ஜூன் 14: திருநீர்மலை பேரூராட்சியில் ரூ.9லட்சம் செலவில் பேரறிஞர் அண்ணா சிறுவர் விளையாட்டு பூங்கா, ரூ.24 லட்சத்தில் 12 இடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள், ரூ.10லட்சம் செலவில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி போன்றைவைகளின் திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு தாம்பரம் ஆர்.டி.. சௌரிராஜன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் சத்தியவாணி விஜயகுமார் வரவேற்றார்.

விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், ரூ.43லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா, உயர்கோபுர மின்விளக்கு, தரைமட்ட நீர் தேக்க தொட்டி ஆகியவற்றை திறந்து வைத்தும், கலைஞர் காப்பீடு அடையாள அட்டைகளை வழங்கியும் பேசினார்.

அவர் பேசுகையில், "திருநீர்மலை பகுதியில் விரைவில் இலவச பட்டா வழங்கப்படும். வீரராகவன் ஏரி சீர்படுத்தப்படும், குறைந்த மின் அழுத்தத்தை போக்க துணை மின் நிலையம் அமைக்கப்படும், அதற்கு 60சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

மாவட்ட ஊராட்சி தலைவர் த.துரைசாமி, மரபுசாரா எரிசக்தி ஆலோசனைக்குழு உறுப்பினர் த. விசுவநாதன், புனிததோமையார்மலை ஒன்றிய குழுதலைவர் எம்.கே.ஏழுமலை, ஆலந்தூர் தாசில்தார் எஸ். கோவிந்தராஜன், செயல் அலுவலர் வி. மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.