Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி எல்கை விரிவாக்கத்தில் புதிய திட்டம் 725 ச.கி.மீ. பரிந்துரையை 150 ஆக குறைத்து அமலாக்க பரிசீலனை

Print PDF

தினகரன் 15.06.2010

மாநகராட்சி எல்கை விரிவாக்கத்தில் புதிய திட்டம் 725 .கி.மீ. பரிந்துரையை 150 ஆக குறைத்து அமலாக்க பரிசீலனை

மதுரை, ஜூன் 15: மதுரை மாநகராட்சி எல்கை விரிவாக்கத்திற்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட 725 சதுர கி.மீ. பரப்பளவை 150 சதுர கி.மீ. ஆக குறைத்து விரிவாக்கம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு தேவையான ஆவணங்களை மதுரை மாநகராட்சி தயாரிக்கிறது.

தமிழகத்தில் சென் னைக்கு அடுத்து 2&வதாக 1971&ல் மதுரை, மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. அப்போது இதன் எல்கை 22 சதுர கிமீ பரப்பளவில் இருந்தது. 1974&ல் சுற்றிலும் இருந்த 13 கிராமங்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 52 சதுர கி.மீ ஆக விரிவடைந்தது. அதன் பிறகு 36 ஆண்டுகளாகியும் எல்கை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால் நகரம் நெருக்கடி அதிகரித்து ஒரு சதுர கி.மீ.க்கு 23 ஆயிரம் பேர் வாழ்வதாக மாநகராட்சி கணக்கிட்டுள்ளது.

குறைந்த பரப்பளவுள்ள பகுதியே மாநகராட்சியாக உள்ளது. இதற்காக நகரை சுற்றியுள்ள உள்ளூர் திட்டக்குழும பகுதி முழுவதும் அதாவது 725 சதுர கிமீ பரப்பளவுக்கு மாநகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து, ஆணையிட அரசை கேட்டு மாநகராட்சி ஏற்க னவே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளது.

இதன்படி திருமங்கலம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், ஆனையூர் ஆகிய 4 நகராட்சி, 3 பேரூராட்சி, 21 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியுடன் இணைய எதிர்ப்பும், ஆனையூர் நகராட்சி இணைய ஆதரவும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளன. திருநகர், ஆர்வி.பட்டி, விளாங்குடி பேரூராட்சிகள் தற்போதைய நிலை நீடிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளன.

ஊராட்சிகளில் மேல மடை, சிந்தாமணி, நிலையூர் பிட்&2, பெருங்குடி ஆகிய 4 ஊராட்சிகள் இணைய வேண்டும் என்றும், வண்டியூர், உத்தங்குடி, நாகனாகுளம், திருப்பாலை, கண்ணனேந்தல், விளாச்சேரி, புதுக்குளம் பிட்&1, புதுக்குளம் பிட்&2, சின்ன அனுப்பானடி, தியாகராஜர் காலனி, தோப்பூர், நிலையூர் பிட்&1, கப்பலூர், உச்சப்பட்டி ஆகிய 14 ஊராட்சிகள் இணைக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளன. நாகமலை புதுக்கோட்டை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரி உள்ளது.

இந்த நிலையில் மாநகராட்சி எல்கை விரிவாக்கத்தில் சிக்கலை தீர்க்க புதிய திட்டம் உருவாகிறது. ஆய்வு நடத்தி பரிந்துரைக்கப்பட்டுள்ள 725 சதுர கி.மீ. பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்யாமல் 150 சதுர கி.மீ. ஆக குறைத்து அமலாக்க பரிசீலனை நடக்கிறது. அந்த அடிப்படையில் ஆவணங்களை மதுரை மாநகராட்சியில் உள்ளாட்சி துறை கேட்டுள்ளது. விரைவில் அனுப்ப மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி ஐகோர்ட் கிளை அமைந்துள்ள பகுதி மற்றும் நகரை ஒட்டிய பகுதிகள் மாநகராட்சியில் இணைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் மற்றும் தூரத்திலுள்ள பகுதிகள் மாநகராட்சியில் இணைய வாய்ப்பில்லை