Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூவம் சீரமைப்பு முதல்கட்டப் பணி முடிந்தது துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சிங்கப்பூர் நிறுவன அதிகாரி சந்திப்பு 2ம் கட்டப் பணிகள் விரைவில் தொடக்கம்

Print PDF

தினகரன் 18.06.2010

கூவம் சீரமைப்பு முதல்கட்டப் பணி முடிந்தது துணை முதல்வர் மு..ஸ்டாலினுடன் சிங்கப்பூர் நிறுவன அதிகாரி சந்திப்பு 2ம் கட்டப் பணிகள் விரைவில் தொடக்கம்

சென்னை, ஜூன் 18: கூவம் நதியை சீரமைக்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து, தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலினை, சிங்கப்பூர் நிறுவன தலைமை அதிகாரி அல்போன்சஸ் சியா சந்தித்து பேசினார். அப்போது, இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

கூவம் நதியை சீரமைப்பதற்காக சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துக்கும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. சீரமைப்பு பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.

துணை முதல்வர் மு..ஸ்டாலின் தலைமை தாங்கினார். தலைமை செயலர் ஸ்ரீபதி, சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவன தலைமை செயல் அதிகாரி அல்போன்சஸ் சியா, சிங்கப்பூர் வாரிய அதிகாரி ராஜிவ் தீட்சித், துணைத் தலைவர் வினோத் சிங், வெளியுறவு அதிகாரி அன்னாநங், தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாக செயலர் நிரஞ்சன் மார்டி, வீட்டு வசதி துறை செயலர் அசோக் டோங்ரே, நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை செயலர் பணீந்திர ரெட்டி, குடிநீர் வழங்கல் வாரிய நிர்வாக இயக்குனர் சிவதாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், சிங்கப்பூர் நிறுவன தலைமை செயல் அதிகாரி அல்போன்சஸ் சியா கூறியதாவது: கூவம் நதியை சீரமைக்கும் பணிகள் பற்றி துணை முதல்வருடன் விவாதித்தோம். கூவம் நதியை சீரமைக்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்து விட்டன. இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த திட்டப் பணிகள் முழுமையாக முடிந்து கூவம் நதி சீரமைக்கப்படும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான கால அளவை நிர்ணயிக்க முடியாது. சிங்கப்பூரில் சீரமைப்பு பணிகள் முடிய 10 ஆண்டுகள் ஆனது. கூவம் நதி நீண்ட தூரம் கொண்டது. எனவே, எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை இப்போதே கூற முடியாது. இவ்வாறு அல்போன்சஸ் சியா கூறினார்.