Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முசிறி பேரூராட்சியில் ரூ.64 லட்சத்தில் பணி

Print PDF

தினகரன் 22.06.2010

முசிறி பேரூராட்சியில் ரூ.64 லட்சத்தில் பணி

தா.பேட்டை, ஜூன் 22: முசிறி பேரூராட்சியில் ரூ.64 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முசிறி தேர்வுநிலை பேரூராட்சி கூட்ட மன்றத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அழகாப்பட்டி சாலை, கூட்டுறவு வங்கி முதல், பேரூராட்சி எல்லை வரை தார் சாலையாக மாற்றுதல், தெருவிளக்கு, ரூ.13.50 லட்சத்தில் அமைப்பது, வடுகப்பட்டியில் ரூ.10 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டுவது, புது கள்ளர் தெருவில் ரூ.5 லட்சத்தில் புதிய கழிவறை கட்டுதல், பார்வதிபுரம் 6வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் ரூ.5.50 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைத்தல்.

முசிறி உழவர் சந்தை கீழ்புறம் ரூ.10 லட்சத்தில் வணிக வளாகம் கட்டுதல், காவிரிக்கரையில் உள்ள பொது மயானத்தில் போர்வெல் மற்றும் தார்ச்சாலை ரூ.5 லட்சம் செலவில் அமைப்பது, குஞ்சாநாயக்கன்பாளையம் வாய்க்கால் மீது ரூ.7 லட்சத்தில் பாலம் கட்டுதல், காவிரி ஆற்றில் மெயின் குடிநீர் குழாயில் ரூ.1.80 லட்சத்தில் ஆங்கில் பொருத்துதல் மற்றும் குடிநீர் விஸ்தரிப்பு உள் ளிட்ட பணிகள் மொத்தம் ரூ.64.25 லட்சத்தில் பணிகள் மேற்கொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சி உறுப்பினர்கள், மன்ற அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.