Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் ரூ.74.50லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள்

Print PDF

தினகரன் 22.06.2010

நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் ரூ.74.50லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள்

பழநி, ஜூன் 22: பழநி அருகே நெய்க்காரப்பட்டி பகுதியில் ரூ.74.50 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பேரூராட்சி தலைவர் முஸ்தபா தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது: பழநி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் 2010&11ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கொழுமம் சாலை முதல் பஜனை கோயில் வரை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வடிகாலுடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் அமைக்கும் பணி நடக்க உள்ளது.

ரூ.5லட்சம் மதிப்பீட்டில் 5வது வார்டு பகுதியில் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி, ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பாரதிநகர் பகுதியில் வணிக வளாகம் அமைக்கும் பணி, ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் காலனி, ஆட்டடி சாலை, குயவர் தெரு மற்றும் 7வது வார்டு பகுதியில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் லட்சுமி கோயில் பகுதி, 6வது வார்டு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, 2010&11 பிற்பட்ட பகுதி மானிய நிதியின் கீழ் சிமெண்ட் தளம், வடிகால் அமைத்தல், சிறுபாலம் ரூ.12 லட்சத்தில் அமைக்கப்படுகிறது. மொத்தம் ரூ.74.50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. டெண்டர் விடப்பட உள்ள நிலையில் விரைவில் பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.