Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணிகள் விரைவில் துவக்கம்: மாநகராட்சி கமிஷனர்

Print PDF

தினமணி 27.07.2010

சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணிகள் விரைவில் துவக்கம்: மாநகராட்சி கமிஷனர்

மதுரை, ஜூலை 26: மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது என, மாநகராட்சி கமிஷனர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

மாநகரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், நலத்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சென்ட்ரல் மார்க்கெட் மாற்றம் செய்யப்பட்டுள்ள இடத்தில் புதிய வாகன நிறுத்துமிடம், வரவேற்பு மையம், பொருள்கள் வைப்பறை போன்ற பணிகளுக்காக ரு.5.62 கோடியிலும், புதுமண்டபம் வியாபாரிகளுக்காக குன்னத்தூர் சத்திரத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு ரு.2.32 கோடியில் பணிகள் நடைபெற உள்ளன.

மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி வண்ண விளக்குகள் அமைப்பதற்கு ரூ.42 லட்சமும், மீனாட்சி பூங்கா ரு.35.24 லட்சத்திலும் வரலாற்று சிறப்பு மிக்க விளக்குத்தூணை அழகுபடுத்தும் பணிக்கு ரு.28.85 லட்சமும், மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக நீர் தேக்கி, புல்வெளி அமைத்தல், வண்ண விளக்குகள் அமைத்தலுக்கு ரூ.2.60 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நகரில் சுற்றுலா இடங்களை தெரிந்துகொள்ளும் வகையில் வண்ண விளக்குகள், விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு ரூ.19 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தற்போதுள்ள தெற்கு மண்டலத்தின் கோட்டைச் சுவர் புனரமைப்புப் பணிக்கு ரு.75 லட்சமும் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற உள்ளன.

இப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு..அழகிரி தலைமையில் விரைவில் நடத்தப்படவுள்ளது எனக் கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்

கோவை காந்திபார்க் ஏ.கே.எஸ் நகரில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று இடித்தனர்.