Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

8 குளங்கள் சீரமைக்க மாநகராட்சி திட்டம்

Print PDF

தினகரன் 30.07.2010

8 குளங்கள் சீரமைக்க மாநகராட்சி திட்டம்

கோவை, ஜூலை 30: கோவை யில் தனியார் பங்களிப்புடன் 8 குளங்களை சீரமை க்க முடிவு எடுக்கப்பட்டுள் ளது. இதற்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை நகர எல்லைக் குள் நரசாம்பதி, கிருஷ்ணாம் பதி, செல்வாம்பதி, குமார சாமி குளம், செல்வசிந்தா மணி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் இருக்கிறது. இந்த குளங்களை, மாநகராட்சி நிர்வாகம் ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் தூர் வாரி சீரமைக்க முடிவு எடுத்தது. 125 கோடி ரூபாய் செலவில், 8 குளங் களை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குள வாய்க்கால் மட்டும் 62 கோடி ரூபாய் செலவில் அமைக் கப்படும். குளம் சீரமைப்பு தொடர் பாக 3 ஆண்டுகளுக்கு முன் விரி வான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த திட்ட அறிக்கை யில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன், மாநகராட்சிக்கு வருவாய் வரும் வகையில் திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சென்னையில் டுபிசெல் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந் தது. இதில் தொழில் நுட்ப ரீதியில் திட்டத்தில் பல்வேறு மாறுதல் தெரிவிக்கப்பட்டது.

ஸீ 125 கோடி செலவாகும் கோவை நகர எல்லைக் குள் நரசாம்பதி, கிருஷ்ணாம் பதி, செல்வாம்பதி, குமார சாமி குளம், செல்வசிந்தா மணி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் இருக்கிறது. இந்த குளங்களை, மாநகராட்சி நிர்வாகம் ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் தூர் வாரி சீரமைக்க முடிவு எடுத்தது. 125 கோடி ரூபாய் செலவில், 8 குளங் களை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குள வாய்க்கால் மட்டும் 62 கோடி ரூபாய் செலவில் அமைக் கப்படும். குளம் சீரமைப்பு தொடர் பாக 3 ஆண்டுகளுக்கு முன் விரி வான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த திட்ட அறிக்கை யில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன், மாநகராட்சிக்கு வருவாய் வரும் வகையில் திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சென்னையில் டுபிசெல் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந் தது. இதில் தொழில் நுட்ப ரீதியில் திட்டத்தில் பல்வேறு மாறுதல் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

இதில், உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் படகு மையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குளத்தின் ஒரு பகுதி யில் மிதக்கும் வகையில் படகு துறை செயல்படும். படகு சவாரிக்கு பைபர் படகு பயன்படுத்தவும், உள்ளூர் வெளியூர் சுற்றுலா பயணிகள் உக்கடம் குளத்தை சுற்றி பார்க்கவும், வெளி நாட்டு பறவைகள் வந்து குவியும் இடங் களை பார்வையிடவும் வழிவகை செய்யப்படும். இதற்கென 1.36 கோடி ரூபாய் செலவிடப்படும். வாகனங்கள் வந்து செல்லும் வசதி, மக்கள் கூட்டம் போன்றவற்றின் அடிப்படையில் மேலும் சில குளங்களில் படகு துறை அமைக்கப்படும். குறிப்பாக முத்தண்ண குளம், சிங்காநல் லூர் குளம், வாலாங்குளத்தை படகு சவாரிக்கு பயன்படுத்தும் யோசனை இருக்கிறது.

90.10 லட்ச ரூபாய் செலவில் 8 குளங்களின் கரைகள் பலப்படுத்தப்படும். 4.86 கோடி ரூபாய் செலவில் குளங்களுக்கு பாதுகாப்பான சுற்று சுவர் அமைக்கப்படும். குளங்களில் யாரும் ஆக்கிரமிக்க முடியாது. அத்துமீறி நுழைய முடியாது. கழிவு, கட்டட இடிபாடு பொருட்களை கொட்ட முடியாது. 23.89 கோடி ரூபாய் செலவில் 8 குளங்கள் தூர் வாரப்படும். 60 ஆண்டுகளுக்கு முன் குளம் இருந்த ஆழ, அகலத்திற்கு ஏற்ப குளங்கள் உருவாக்கப்படும். குளங்களுக்கு செல்லும் மாசு கலந்த நீரை 5.96 கோடி ரூபாய் செலவில் சுத்திகரித்து மீண்டும் குளங்களில் தேக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவை மா நகராட்சி பகுதியில் உள்ள சாக் கடை கழிவு மற்றும் மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள பேரூரா ட்சி, நகராட்சி பகுதியிலிருந்து வரும் கழிவு நீரும் குளங்களுக்கு செல்கிறது.

இந்த கழிவு நீரை சுத்திகரித்து குளங்களுக்கு விடப்படும். குளங்களில் நடைபாதை, அழகான பூங்கா, நீருற்று, மின் விளக்கு அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள் ளது. குளங்களின் கரைகளை அகலமாக்குவதன் மூலம் காலை, மாலை நேரத்தில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள முடியும். தனியார் பங்களிப்பில், குளங் களை சீரமைக்கப்படும். ஆண்டி ற்கு சுமார் 10 கோடி ரூபாய் பராமரிப்பு பணிக்கு செலவிடப்படும்.