Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாவட்டத்தில் ரூ.202.69 கோடியில் திட்டப் பணிகள்

Print PDF

தினமலர் 04.08.2010

நெல்லை மாவட்டத்தில் ரூ.202.69 கோடியில் திட்டப் பணிகள்

திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் துணை முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்கிறார். 202.69 கோடி மதிப்பில் திட்டங்கள் துவக்க விழா, திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் நெல்லை மாவட்டத்திற்கு வரும் 6ம் தேதி வருகை தருகிறார். அன்று காலை 10 மணிக்கு அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் வண்ணார்பேட்டை புதிய மேம்பாலம், மணிமுத்தாறு, விக்கிரமசிங்கபுரம் குடிநீர் திட்டங்கள் துவக்க விழா, 25 கோடியில் கட்டப்படும் பாளை குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழா, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் விழா நடக்கிறது.

இங்கு 47.89 கோடி மதிப்பில் 354 திட்டங்கள் திறக்கப்பட்டு 55.50 கோடி மதிப்பில் 40 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. 34 ஆயிரத்து 87 பேருக்கு 19.98 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மொத்தம் 123.37 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கியும், புதிய திட்டங்களை துவக்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளையும் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

கடையநல்லூர்:>அன்று மாலை 4.30 மணிக்கு கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 21.41 கோடி மதிப்பில் கடையநல்லூர் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள், வளர்ச்சி திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, 50 லட்சத்தில் வாஞ்சிநாதன் மணிமண்டப பணிகள் துவக்க விழா, அச்சன்புதூரில் 110 கேவி புதிய மின் துணை மின் நிலையம், 4.60 கோடியில் தென்காசி, செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கட்டடங்கள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.

இதில் 39.22 கோடி மதிப்பில் 73 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 20.66 கோடியில் 66 திட்டங்களை துவக்கி வைத்தும், 1,654 பேருக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி தொகை உட்பட மொத்தம் 60.79 கோடி திட்ட விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.சங்கரன்கோவில்:வரும் 7ம் தேதி காலை 10 மணிக்கு சங்கரன்கோவில் களப்பாகுளத்தில் 2.50 கோடி மதிப்பில் மாவட்டத்தில் 8வது அரியநாயகிபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழா, 1.68 கோடியில் சங்கரன்கோவில் தாலுகா அலுவலக புதிய கட்டட திறப்பு விழா, புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.50 லட்சம் மதிப்பில் குருவிகுளம் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி, 1.08 கோடியில் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறை கட்டடம் மற்றும் ஆய்வகம் ஆகியவற்றிற்கும் அடிக்கல் நாட்டப்படுகிறது.

இதில் 2.95 கோடியில் 10 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 10.24 கோடியில் 27 திட்டங்களை துவக்கி வைத்தும், 4,420 பேருக்கு 5.34 கோடியில் நலத்திட்ட உதவிகள் உட்பட மொத்தம் 18.53 கோடி திட்டங்களை துணை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 78.80 கோடியில் 447 திட்டப் பணிகள் துவக்கப்படுகிறது. 97.68 கோடி மதிப்பில் 123 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 40 ஆயிரத்து 161 பேருக்கு 26.22 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மொத்தம் 202.69 கோடியில் திட்டங்கள் துவக்க விழா, புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.மேலும், கடையநல்லூரில் சிறுபான்மையினர் மாணவர் விடுதி கட்டவும், அம்பையில் 110 கே.வி துணை மின்நிலையம் அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.