Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக. 6, 7ல் துணை முதல்வர் துவக்கி வைக்கிறார் நெல்லை மாவட்டத்தில் ரூ.200 கோடி திட்டப் பணிகள்

Print PDF

தினகரன் 04.08.2010

ஆக. 6, 7ல் துணை முதல்வர் துவக்கி வைக்கிறார் நெல்லை மாவட்டத்தில் ரூ.200 கோடி திட்டப் பணிகள்

நெல்லை, ஆக. 4: நெல்லை மாவட்டத்தில் ஆக.6, 7 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள் ளும் துணை முதல்வர் மு.. ஸ்டாலின் ரூ.200 கோடி மதிப்பிலான திட்டப் பணி களை துவக்கி வைக்கிறார்.

நெல்லை மாவட்டத்தில் அரசு த¤ட்டப் பணிகளை துவக்கி வைக்க துணை முதல்வர் ஸ்டாலின் நாளை நெல்லை வருகிறார். தூத்துக் குடியில் இருந்து வரும் அவ ருக்கு சாரதா கல்லூரி அரு கே மாவட்ட திமுக செய லாளர் கருப்பசாமி பாண்டி யன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படு கிறது. பின்னர் ஆக.6, 7ம் தேதிகளில் அரசு விழாக் களில் பங்கேற்கிறார்.

இதுகுறித்து நெல்லை கலெக்டர் ஜெயராமன் நிருபர்களிடம் கூற¤ய தாவது:

நெல்லை வண்ணார் பேட்டை புதிய மேம்பாலத் தை ஆக.6¢ துணை முதல் வர் திறந்து வைக்கிறார். பின் னர் அம்பையில் நடக்கும் விழாவில் ரூ.25 கோடியில் கட்டப்பட உள்ள குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். வி.கே.புரம், மணிமுத்தாறு குடிநீர்த் திட்டப் பணிகளை துவக்கி வைத்து 2 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குகிறார்.

இந்த விழாவில் அரசு சார்பில் நிறைவேற்றப் பட் டுள்ள ரூ.47.89 கோடி மதிப் பிலான 354 திட்டங்களை துணை முதல்வர் துவக்கி வைக்கிறார். ரூ.55.50 கோடி மதிப்பிலான 40 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி 34 ஆயிரத்து 87 பேருக்கு ரூ.19.98 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்த விழாவில் மட்டும் ரூ.123.37 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் துவக்கி வைக்கிறார்.

அன்று மாலை கடைய நல்லூரில் நடைபெறும் விழாவில் ரூ.21 கோடியில் கடையநல்லூர் குடிநீர் அபிவிருத்தி திட்டம், ரூ.50 லட்சத்தில் வாஞ்சிநாதன் மணிமண்டபம், அச்சன் புதூரில் 110 கே.வி., துணை மின்நிலையம் ஆகிய பணிகளை துவக்கி வைக்கி றார்.

இதில் ரூ.39.22 கோடி மதிப்பிலான 73 பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் துணை முதல்வர், செங்கோட்டை, தென்காசி அரசு மருத்துவ மனை கூடுதல் கட்டிடங்கள் உட்பட முடிக்கப்பட்ட ரூ.20.66 கோடி மதிப்பிலான 66 பணிகளை திறந்து வைத்து ஆயிரத்து 654 பேருக்கு 90 லட்சம் மதிப்பில் மகப்பேறு உதவித்தொகை வழங்குகிறார். இந்த விழா வில் ரூ.60.79 கோடி மதிப் பிலான புதிய திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

7ம் தேதி காலை சங்கரன்கோவில் அருகே அரியநாயகிபுரத்தில் ரூ.2.55 கோடியில் சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கு நடக்கும் அரசு விழாவில் ரூ.1.68 கோடியில் கட்டப்பட்ட தாலுகா அலு வலகம் உட்பட ரூ.10.24 கோடி மதிப்பிலான 27 பணிகளை திறந்து வைக் கிறார். ரூ.2.95 கோடியில் ஆதிதிராவிடர் விடுதி, அரசு பள்ளி கூடுதல் கட்டிடங்கள் உட்பட 10 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் 4 ஆயிரத்து 420 பேருக்கு ரூ.5.34 கோடி மதிப்ப¤லான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படு கிறது. இந்த விழாவில் ரூ.18.53 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

இரண்டு நாள் விழாக் களிலும் ரூ.78.80 கோடி செலவில் நிறைவடைந்த 447 அரசு கட்டிடங்களை திறந்து வைத்து, ரூ.97.68 கோடி மதிப்பிலான 123 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.26.22 கோடியில் 40 ஆயிரத்து 161 பேருக்கு நலத்திட்ட உதவி களை வழங்குகிறார். மொத் தம் ரூ.202. 69 கோடி மதிப் பிலான பணிகளை துவக்கி வைக்கிறார்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.