Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துணை முதல்வர் ஸ்டாலின் தகவல் கூவம் சீரமைப்பு6 ஆண்டுகளில் முடியும்

Print PDF
தினகரன் 05.08.2010

துணை முதல்வர் ஸ்டாலின் தகவல் கூவம் சீரமைப்பு6 ஆண்டுகளில் முடியும்

சென்னை, ஆக.5: கூவம் நதி ஆறு ஆண்டுகளில் முழுமையாக சீரமைக்கப்படும். இதற்காக ரூ1,200 கோடி செலவிடப்படும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் ரோட்டிலுள்ள கூவம் நதிக் கரையிலும், புதிய தலைமைச் செயலகம் அமைந்துள்ள சிவானந்தா சாலையில் கூவம் நதிக் கரையிலும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா புதுப்பேட்டையில் நேற்று நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை முதல்வர் மு..ஸ்டாலின் பங்கேற்று பூங்காக்களை திறந்து வைத்தார்.

பின்னர், நிருபர்களிடம் மு..ஸ்டாலின் கூறியதாவது: லாங்ஸ் கார்டன் பகுதியில் கூவம் கரையில் ரூ1 கோடியே 35 லட்சம் செலவிலும் சிவானந்தா சாலையில் கூவம் நதிக்கரையில் ரூ86 லட்சம் செலவிலும் உருவாக்கப்பட்டுள்ள பூங்காக்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கூவம் நதியை முதலிலும், பின்னர் சென்னை நகரின் பிற முக்கிய நீர் வழித்தடங்களையும் சேர்த்து சீரமைக்கும் நோக்கத்துக்காக, அடையாறு பூங்கா அறக்கட்டளை என்பது, ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைஎன கடந்த ஜனவரி 22ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது.

சென்னை நீர்வழித்தடங்களை சீரமைக்கவும், திட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தியபின் அவற்றை கண்காணிக்கவும் எனது தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூவத்தை சீரமைக்க, ‘சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துடன்சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை கடந்த மார்ச் மாதம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் போட்டுள்ளது. ரூ1,200 கோடியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்.

சிங்கப்பூர் நதியை சீரமைக்க 10 ஆண்டுகள் ஆனது. கூவம் நதி ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் சீரமைக்கப்படும்.

இவ்வாறு துணை முதல்வர் கூறினார். நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, பொதுப்பணித்துறை முதன்மை செயலர் ராமசுந்தரம், துணை முதல்வரின் முதன்மை செயலாளர் கே.தீனபந்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலர் பணிந்திர ரெட்டி, மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லக்கானி, துணை மேயர் ஆர்.சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். 1200 தொழிற்கூடம் ஆப்பூருக்கு மாற்றம்